காவிரிக்காக, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்குமா அதிமுக?
Recommended Video

டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. 19ம் தேதி அதன் மீது வாக்கெடுப்பு நடைபெறலாம் என தெரிகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதோடு, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு புறம் தள்ளிவிட்டது, கூட இருந்தே தெலுங்கு தேசத்திற்கு குழி பறிக்கும் செயலிலும் பாஜக ஈடுபடுகிறது என்பது அக்கட்சி குற்றச்சாட்டு.

கட்சிகள் பலம்
மோடி அரசுக்கு எதிராக முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவாகும். காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஆதரவு அளித்துள்ளது. மொத்தம் 536 உறுப்பினர்களை கொண்ட லோக்சபாவில் ஆளும் பாஜகவுக்கு மட்டும் 274 எம்பிக்கள் உள்ளனர். இது தவிர கூட்டணி கட்சிகளும் உள்ளன. 269 உறுப்பினர்கள் ஆதரவு பெரும்பான்மைக்கு தேவை. எனவே பாஜக தனது சொந்த பலத்தாலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்துவிடும் என்பதால் ஆட்சி கவிழுமா என்ற கேள்வி எழாது.

தேர்தலுக்கு முந்தைய முரசு
அதேநேரம், பாஜகவுக்கு எதிராக முதல் முறையாக எதிர்க்கட்சிகளும் அதன் கூட்டணியில் இருந்த சில கட்சிகளுமோ தொடுத்துள்ள இந்த யுத்தம் என்பது முக்கியமானது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலின்போது பாஜகவுக்கு இது பெரும் சவாலாக மாறும். அதற்கான சங்கநாதம்தான் நம்பிக்கையில்லா தீர்மானம்.

தேவையுள்ளது
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்பதே இப்போது நாடு முழுக்க எதிரொலிக்கும் கேள்வியாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிடாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது. தமிழகத்தின் ஜீவனை பிடுங்குவது போன்ற செயல் இது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதைவிட முக்கியமான பிரச்சினை இது. போலவே, அதிமுகவை உடைக்கவும், அதன் வாக்குகளை பிரிக்கவும் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம், தோளில் கை போட்டபடியே பாஜக செய்கிறது. எனவே சந்திரபாபு நாயுடுவிற்கு பாஜகவை எதிர்க்க என்ன தேவை இருந்ததோ அதைவிட அதிக தேவை அதிமுகவுக்கு உள்ளது.

அதிமுக முடிவு என்ன?
இந்த சூழ்நிலையில், பாஜகவை எதிர்த்து அதிமுக தனது வாக்கு வங்கியை தக்க வைத்து கட்சியை பலப்படுத்துமா அல்லது, கவிழ்க்க முடியாது என தெரிந்தும், ஏன் பாஜகவை எதிர்க்க வேண்டும்? இதனால் தங்கள் ஆட்சிக்கு பிரச்சினை வருமோ என்றெல்லாம் எண்ணி பொறுமை காக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications