”பாஜகவில் ஒரு பூசலும் இல்லை” – ராஜ்நாத் சிங் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவில் எந்தவிதமான உள்கட்சி பூசல்களும் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் விளக்கம் கூறியுள்ளார்.

கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கட்சித் தலைவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதாக பாஜகவில் ஒரு செய்தி உலா வந்தது.

No crisis in BJP: Rajnath

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "பாஜகவில் அதுபோன்று உள்கட்சி பூசல்கள் இல்லை" என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், "கிரண் பேடிக்கு கட்சி முன்னுரிமை தருவதாகவும், அதனால் பாஜகவில் உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுவது தவறு.

பாஜகவில் நெருக்கடி ஏதும் இல்லை. டெல்லி தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் வகையில் கட்சியினர் பணியாற்றி வருகின்றனர். கட்சித் தொண்டர்களுக்கு ஏதும் குறைபாடு இருந்தால் அவர்கள் கட்சியின் தலைவர்களிடம் பேசுகிறார்கள்.

இதை ஒரு விவகாரமாகவே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒட்டுமொத்த கட்சித் தொண்டர்களும் டெல்லி தேர்தலில் முழுமனதுடன் தங்களது பங்களிப்பை தருவார்கள்" என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+