இந்த சுதந்திர தினத்துக்கு வாகா எல்லையில் இனிப்பு கிடையாது!
Subscribe to Oneindia Tamil
இந்த சுதந்திர தினத்தன்று வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு பரிமாறப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.

ஒவ்வொரு பண்டிகையின் போதும் எல்லையில் இனிப்புப் பரிமாறிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தானின் வாகா எல்லையில் சுதந்திர தினத்தன்று இரு நாடுகளுக்கிடையே இனிப்பு பரிமாறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 14 மற்றும் 15ம் தேதி இனிப்புகள் பரிமாறப்படாது.
இந்திய எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் துருப்புகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் இனிப்பு பரிமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications