ரயில்வே பட்ஜெட்: பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை- புதிய ரயில்களும் இல்லை
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வு இடம்பெறவில்லை. அதேபோல் புதிய ரயில்களும் அறிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ரயில்வே துறையின் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதேபோல் ரயில் பயணிகளுக்கான வசதிகளை நவீனப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன. அதே நேரத்தில் கடந்த பட்ஜெட்டைப் போலவே பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வு எதுவும் இடம்பெறவில்லை.

மேலும் புதிய ரயில்கள் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் முந்தைய ரயில்வே திட்டங்களுக்குத்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை.
வழக்கமாக ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் இடம்பெறும். ஆனால் மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின்னர் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு 2-வது முறையாக இடம்பெறவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications