"பலான படம்" பார்த்த பாஜக எம்எல்ஏ.. "ஆபாச வீடியோ திடீர்னு ஓடுச்சு, அப்போ நான்".. திரிபுரா MLA விளக்கம்
அகர்தலா: சட்டப்பேரவைக்குள்ளேயே ஆபாச படம் பார்த்து சிக்கி உள்ளார் பாஜக எம்எல்ஏ.. இவருக்கு கட்சி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அதற்கு விளக்கம் தந்துள்ளார் சம்பந்தப்பட்ட பாஜக எம்எல்ஏ.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில், சமீபத்தில்தான் தேர்தல் நடந்து முடிந்தது.. மறுபடியும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மாணிக் சாஹா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், இப்போது, பாஜக எம்எல்ஏ ஒருவரால் அந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்பட்டு வருகிறது.

கேஷூவல்
திரிபுரா சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ஜதாப் லால் நாத் என்பவர் சட்டசபையிலேயே ஆபாச படம் பார்த்ததாகப் புகார் எழுந்தது. இவர், பாக்பாசா தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஆவார்.. அதாவது சட்டசபை நடந்து கொண்டிருந்தபோதே, இவர் தன்னுடைய செல்போனில் ஆபாசப் படம் பார்த்துள்ளார்... அதுவும், மாநில பட்ஜெட் தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்தபோதே இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார்.. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாகப் பரவிக் கொண்டேயிருக்கிறது.

சீரியஸ் பேச்சு
சபாநாயகரும் மற்ற எம்எல்ஏக்களும் சீரியஸாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது இவர் சட்டசபை வாதங்களை கவனிக்காமல், வீடியோவை பார்த்து கொண்டு உட்கார்ந்துள்ளார்.. இவர் ஆபாச வீடியோ பார்ப்பதை, இவருக்கு பின்னால் உட்கார்ந்திருந்த யாரோ ஒருவர், வீடியோ எடுத்துவிட்டார்.. அந்த வீடியோவில், ஆபாச வீடியோ கிளிப்களை, கேஷூவலாக ஸ்க்ரோல் செய்துகொண்டே பார்த்து கொண்டிருக்கிறார் பாஜக எம்எல்ஏ.. அந்த வீடியோவில் இது கிளியராகவும் பதிவாகி உள்ளது.. மற்ற எம்எல்ஏக்கள் எல்லாரும் விவாதத்தை கவனித்தால் இவர் மட்டும் ஆபாச படத்தை பார்த்து கொண்டிருக்கிறார்..

சலசலப்புகள்
இந்த வீடியோவை பார்த்ததுமே பலருக்கும் தூக்கிவாரிப்போட்டது.. கூட்டத்தொடர் முடிந்ததுமே, அவர் சட்டசபை வளாகத்தை விட்டு வெளியேறி சென்றுவிட்டாராம். இதுதொடர்பான சர்ச்சைகள், சலசலப்புகள் கிளம்பிய நிலையில், இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் ராஜிப் பட்டாச்சார்யா தெரிவித்திருந்தார்.. அதன்படியே நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், தன்னுடைய செயலுக்கு சம்பந்தப்பட்ட எம்எல்ஏ ஒரு விளக்கம் தந்துள்ளார்..

ஜதாப் விளக்கம்
அதில், பேரவைக்குள் செல்போன் பயன்படுத்த கூடாது என்று தனக்கு தெரியும், ஆனால் அப்போது தொடர்ச்சியாக எனக்கு செல்போன் அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால் நான் செல்போனை எடுத்தேன். அப்போது திடீரென ஆபாச படங்கள் ஓடத் தொடங்கியது... ஆனால் உடனடியாக அதை மூடிவிட்டேன் என்று ஜதாப் விளக்கம் தந்துள்ளார்... இந்த விளக்கம் தொடர்பாக பாஜக தரப்பு இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.. இப்படி ஒரு விளக்கத்தை இவர் தந்திருந்தாலும், இணையவாசிகள் அந்த விளக்கத்தை ஏற்கவில்லை.

மூடிட்டேன்
"உடனடியாக செல்போனை அவர் மூடிவிட்டதுபோல் தெரியவில்லையே.. மெதுவாக ஸ்க்ரோல் செய்தபடியே வீடியோ பார்த்து கொண்டிருக்கிறாரே" என்று அந்த விளக்கத்தின் கீழ் கமெண்ட்கள் குவிந்து கொண்டிருக்கின்றன... மக்களின் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள், அதுவும், சட்டசபையிலேயே, அதுவும் மக்கள் பிரச்சனையை பேசக்கூடிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு, இப்படி ஆபாச படம் பார்த்து மாட்டிக்கொள்வது இதற்கு முன்பும் நம்முடைய நாட்டிலேயே நடந்துள்ளது.. 2012-ல் கர்நாடகாவில் இதுபோன்றே பாஜக ஆட்சியில், இதுபோன்றே சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோதே, 2 அமைச்சர்கள் போனில் ஆபாச வீடியோவைப் பார்த்து அசிங்கப்பட்டு கொண்டார்கள்..

க்ளைமேக்ஸ்
அவர்கள் தங்கள் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தனர்.. அவர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.. "ரேவ் பார்டிகள்" என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவே, அப்படி வீடியோ பார்த்தாக சாக்கு சொன்னார்கள்.. ஆனாலும் அவர்கள் மீதான விசாரணையில், அவர்கள் ஒரு தப்புமே செய்யவில்லை என்று சொன்னதையடுத்து, மறுபடியும் அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டது.. இந்த சம்பவத்தை இந்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.. இப்போது, இந்த திரிபுரா பாஜக விவகாரம் என்ன ஆகும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.!!
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications