காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை: சபாநாயகர் முடிவு
டெல்லி: மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்காமல் இருக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த நிலையில், அதற்கு அடுத்தபடியாக 44 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் 2ம் இடத்தை பிடித்தது. 543 உறுப்பினர் பலம் கொண்ட மக்களவையில் குறைந்தபட்சமாக, பத்து சதவீதமான 54 எம்.பிக்களாவது இருந்தால்தான் அந்த கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். அல்லது எந்த கட்சிக்கும் அந்த அஸ்தஸ்தை வழங்காமல் இருக்க சபாநாயகரால் முடியும்.

எதிர்க்கட்சி அந்தஸ்து குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய, சுமித்ரா மகாஜன் எந்த கட்சிக்கும் அந்த அந்தஸ்தை வழங்காமல் இருக்க தீர்மானித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற கட்சியின் மக்களவை குழு தலைவர் எதிர்க்கட்சி தலைவராக முடியும். அமைச்சருக்கு நிகரான அனைத்து சலுகைகளும் அவருக்கும் கிடைக்கும். ஆனால் எப்படியும் தங்களுக்கு அந்த பதவி கிடைக்காது என்பதால் ராகுல்காந்திக்கு பதிலாக, மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக கர்நாடக எம்.பியான மல்லிகார்ஜுனகார்கேவை சோனியாகாந்தி நியமித்திருந்தார்.
சுதந்திரத்துக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் பலத்துடன் ஆட்சியமைத்தது. அப்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை காணப்பட்டது. அந்த வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications