உ.பி. பாஜக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லீம் கூட இல்லை
லக்னோ: வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லை.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக இதுவரை 6 மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 80 எம்.பி.க்களை லோக்சபாவுக்கு அனுப்பும் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை. அந்த மாநிலத்தில் வாக்களிப்பவர்களில் 17 சதவீதம் பேர் முஸ்லீம்கள்.

இது குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
ஜெயிப்பதை நாங்கள் பார்க்க வேண்டும். பிற மாநிலங்களில் முஸ்லீம்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். முஸ்லீம் சகோதர, சகோதரிகள் எங்களுடன் சேர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
பாஜக இதுவரை வெளியிட்டுள்ள 6 மாநில வேட்பாளர்கள் பட்டியலில் வெறும் 5 முஸ்லீம்களின் பெயர்களே இடம்பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 பேர், பீகார் மற்றும் லச்சத்தீவில் தலா ஒருவர் என்று 5 முஸ்லீம் வேட்பாளர்களே பாஜகவில் உள்ளனர். மேலும் பாஜக பட்டியலில் 2 கிறிஸ்துவர்கள் மற்றும் ஒரு புத்தமதத்தவரின் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications