கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்
கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு, டெல்லி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்குவதாகவும் அப்படி தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்கக் கோரியும், இந்தியாவில் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட கோவிட் தடுப்பூசியின் கிளினிகல் பரிசோதனை தொடர்பான தரவுகளை, சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப வெளியிடும்படி உத்தரவிடக் கோரியும் தடுப்பூசி தொடர்பான தேசிய நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜேக்கப் புலியல் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டபிறகு ஏற்படும் தீயவிளைவுகளைப் பற்றி அறிக்கை அளிப்பதற்கான முறை இந்தியாவில் தெளிவற்றதாகவும், தவறாகவும், மக்களுக்கு தெரியாததாகவும் இருப்பதாக கூறிய ஜேக்கப் புலியல், இந்த முறையை சீரமைக்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
- கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
- தடுப்பூசிகள் வேலை செய்வது எப்படி? சிலர் ஏன் அதைக்கண்டு அஞ்சுகின்றனர்?
இந்த வழக்கை விசாரித்த எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உடல் சார்ந்த சுதந்திரம்/உரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை. எனவே எவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
உடல் சார்ந்த சுதந்திரம், உரிமை ஆகியவற்றை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 பாதுகாப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிப்பற்கும், வளங்களைப் பயன்படுத்துவதற்கும் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமற்றவை என்று கூறிய உச்ச நீதிமன்றம், அந்த கட்டப்பாடுகளை மாநிலங்கள் நீக்கலாம் என்று தெரிவித்தது.
அதே நேரம், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். (இந்த செய்தி தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?













Click it and Unblock the Notifications