அமைச்சரவையில் இடம் இல்லை.. அமித்ஷாவுக்கு பாஜக தலைவர் பதவியா?
டெல்லி: பிரதமர் அலுவலக இணை அமைச்சராவார் என்று யூகிக்கப்பட்ட பிரதமர் மோடியின் வலதுகரம் அமித்ஷா பெயர் அமைச்சரவை பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவருக்கு பாரதிய ஜனதா தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் வலது கரமாக இருந்தவர் அமித்ஷா. பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டது முதலே உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா வரலாற்று சாதனை படைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றதில் அமித்ஷாவின் பங்களிப்பு முதன்மையானது. இதனாலேயே அவருக்கு மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

குறிப்பாக குஜராத் முதல்வரான ஆனந்திபென் படேல் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அமித்ஷா மத்திய அமைச்சராவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று பதவியேற்ற மோடி அமைச்சரவையில் அமித்ஷா பெயர் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் பாஜகவின் புதிய தலைவராக அமித்ஷாவையே நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதுதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாஜக தலைவராக இருக்கும் ராஜ்நாத்சிங் மத்திய அமைச்சராகிவிட்டதால் புதிய பாஜக தலைவர் நியமிக்கப்பட இருக்கிறார்.
பாஜக தலைவராக நட்டா நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டாலும் அனேகம் அமித்ஷாதான் தலைவராக நியமிக்கப்படலாம் என்கின்றன டெல்லி பாஜக வட்டாரங்கள்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications