காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீது குறி வைத்து தாக்குதல்.. 2 வாரத்தில் 11 பேர் பலி.. பின்னணியில் பாக்?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பீகாரை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். கடந்த இரண்டு வாரத்தில் நடத்தப்பட்ட இது போன்ற தாக்குதல்களில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது கடந்த இரண்டு வாரமாக கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. காஷ்மீரில் வெளிமாநில மக்கள் குடியேறி அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதில் பீகார், உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

மீண்டு வருகிறார்கள்
முக்கியமாக ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றாலும் போரின் போது அங்கிருந்து வெளியேறிய காஷ்மீரி பண்டிட்கள் மீதும் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கொல்லப்பட்ட 11 பேரில் சிலர் காஷ்மீரி பண்டிட்கள் என்று கூறப்படுகிறது. காஷ்மீருக்கு மீண்டும் வெளிமாநில தொழிலாளர்கள், வெளிமாநில மக்கள் வருவதை விரும்பாமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொலை
முக்கியமாக மர வேலை பார்க்கும் வெளிமாநில மக்கள். பானிபுரி விற்கும் மக்கள். ஆசிரியராக பணியாற்றும் வெளிமாநில மக்கள் என்று பலர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 பீகார் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். குல்காம் பகுதியில் வான்போ என்ற இடத்தில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது.

சந்தேகம் பாகிஸ்தான்
இந்த தாக்குதல்களுக்கு பின் பாகிஸ்தானின் தூண்டுதல் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பாகிஸ்தானின் தூண்டுதல் மூலம் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் நடக்கும் இந்த வெறுப்பு தாக்குதல்களுக்கு எதிராக போலீசாரும், ராணுவத்தினரும் கூட்டு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

என்ன காரணம்?
ஜம்மு காஷ்மீரில் தற்போது வெளிமாநில ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக கொரோனா காலத்திற்கு பின் பலர் அங்கே குடியேற தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு இருக்கும் மக்கள் சிலர் இதை எதிர்க்க தொடங்கி உள்ளனர். இந்த மோதலை பயன்படுத்தி தற்போது தீவிரவாதிகள் தாக்கத்தால் நடத்தி உள்ளனர். கொல்லப்பட்ட 11 பேரில் பீகாரை சேர்ந்த பானிபூரி விற்பனையாளரும் ஒருவர்.
Recommended Video

துப்பாக்கி சூடு
இவர் பானிபூரி விற்கும் போது துப்பாக்கியால் சுடப்பட்டு இருக்கிறார். அதேபோல் அங்கு நர்சரி பள்ளி ஒன்றில் பணியாற்றும் வெளிமாநில ஆசிரியரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் இருந்து வெளிமாநில மக்களை வெளியேற்ற வேண்டும் என்று இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இதனால் காஷ்மீரி பண்டிட்கள், வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தற்போது ராணுவ முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பதிலடி
போலீசார் நடத்திய சோதனையில் இதுவரை 900 பேர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்னர். 13 தீவிரவாதிகள் இரண்டு வாரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications