மானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்தது
டெல்லி: மானியம் பெறாத காஸ் சிலிண்டர்கள் விலையை ரூ.25.50 குறைத்து ஆயில் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் விலை குறைப்பு சாத்தியப்பட்டுள்ளதாக பொருளாதர வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
மானியம் பெறாத 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் இதுவரை ரூ.928.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.25.50 விலை குறைக்கப்பட்டுள்ளதால் சந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.905க்கு கிடைக்கிறது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை ஒரு குடும்பம் மானிய விலையில் பெற முடியும். இந்த எண்ணிக்கையை தாண்டி குடும்பத்தின் சிலிண்டர் தேவை அதிகரித்தால் மானியம் அளிக்கப்படாத சிலிண்டர்களைதான் வாங்க வேண்டியிருக்கும்.

அதுபோல ஹோட்டல் போன்ற தொழில்நிறுவனங்களுக்கும் மானியம் அளிக்கப்படாத சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அவர்களுகளுக்கெல்லாம் இந்த விலைக்குறைப்பு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். சிலிண்டர் விலை குறைப்பு அப்படியே தொடர்ந்தால் ஹோட்டலில் உணவு பண்டங்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும். அதே நேரம் வீடுகளுக்கு வழங்கப்படும் மானித்துடன் கூடிய சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.414ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications