மானியமில்லா சமையல் எரிவாயுவின் விலை ரூ.113 குறைப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மானியமில்லா சமையல் எரிவாயுவின் விலை ரூ113 குறைக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலையை மோடி குறைத்தால் பாஜகவிலேயே இணைந்துவிடுவதாக முன்னர் கூறிய அரவிந்த் கேஜ்ரிவால் தாம் அறிவித்தபடி தற்போது அக்கட்சியில் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

Non-subsidized LPG price cut by Rs 113

இதன்படி சர்வதேச விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மாதந்தோறும் 1 மற்றும் 16-ந்தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 96 காசுகள் குறைந்து ரூ.66.05-க்கு விற்பனையாகும். இதேபோல் டீசலும் ஒரு லிட்டருக்கு 91 காசுகள் குறைந்து ரூ.55.93-க்கு விற்பனையாகும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் மானியமில்லாத சமையல் எரிவாயுவின் விலைகளும் குறைக்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களுக்கான பெட்ரோல் 4.1% குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி நிலவரப்படி இதுவரை 865 ரூபாய்க்கு விற்பனையான 14.2 கிலோ எரிவாயு கொண்ட சிலிண்டரின் விலையில், இன்று முதல் 113 ரூபாய் குறைந்து 752 ரூபாய்க்கு விற்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் மானியத்துடன் ஆண்டொன்றுக்கு மக்களுக்கு வழங்கப்படும் 12 சிலிண்டர்களுக்கும் மேலாக கூடுதலாக வாங்கப்படும் மானியமற்ற சிலிண்டர்களின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 5 முறை குறைக்கப்பட்டுள்ளதும், ஆகஸ்ட் மாதத்தில் இருந்த விலை நிலவரத்தில் இருந்து சுமார் 170 ரூபாய் விலை குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+