வடமாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் புழுதி புயல்.. கனமழை ஆபத்து.. எச்சரிக்கும் வானிலை மையம்
வடமாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் புழுதி புயல் வீசும் ஆபத்து உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video

டெல்லி: வடமாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் புழுதி புயல் வீசும் ஆபத்து உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென புழுதி புயல் வீசியது.
இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் கொட்டித் தீர்த்தது. மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.
|
மரங்கள் சாய்ந்தன
பல இடங்களில் வீடுகளின் கூரைகள் பறந்தன. குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் வேறோடு சாய்ந்தன

இதுவரை 126 பேர் பலி
திடீரென வீசிய இந்த புழுதி புயல் மற்றும் அதைத்தொடர்ந்து பெய்த இடி-மழையால், வீடுகளில் இருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதனால் இவதுரை 126 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

வானிலை மையம் எச்சரிக்கை
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் புழுதி புயல் அடிக்கலாம் எனவும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர், இமாசலபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநில மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை மையம் கேட்டுகொண்டுள்ளது.

7ஆம் தேதியும் புழுதிபுயல்
இது போல் வரும் ஏழாம் தேதி திங்கள்கிழமையும் மேற்கூறிய பகுதிகளிலும், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாநிலங்களிலும் மழை, புழுதிபுயல் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு
இதனால் பொது மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.ங மேலும் தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications