வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள்: உடனுக்கு உடன் தெரிந்துகொள்ள டெய்லி ஹண்ட் உடன் இணைந்திருங்க
நாகலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை: நாகலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 3 மாநில தேர்தல் முடிவுகளையும் டெய்லி ஹண்ட் லைவ் ஆக கவரேஜ் செய்கிறது. வெறும் எண்ணிக்கையை மட்டும் வெளியிடாமல் விரிவான மற்றும் துல்லியமான தகவல்களுடன் வெளியிடுகிறது. சாதாரண மக்கள் முதல் அரசியல் நிபுணர்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் துல்லியமாகவும் விரிவான தேர்தல் முடிவுகளை வெளியிடுகிறது.
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்த சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே வெளியிடப்படுகின்றன.

திரிபுரா மாநில தேர்தல்
திரிபுராவை பொறுத்தவரை ஆளும் பாஜகவுக்கு எதிரான ஒரு அலை நீடிப்பதால் அங்கு அக்கட்சிக்கும் ஒரு சவாலான நிலையே நீடிக்கும் என்று தெரிகிறது. கடந்த 2018- ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டது போல இந்த முறை காங்கிரஸ், இடது சாரிகள் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. திரிபுராவை பொறுத்தவரை பழங்குடியின மக்களின் வாக்குகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு திப்ரா மோதா கட்சி கடும் சவால் அளிக்கும் என்று தெரிகிறது. காங்கிரசும் இடது சாரிகளும் அகன்ற திப்ரலாந்து கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.

நாகாலாந்து தேர்தல்
நாகலாந்தை பொறுத்தமட்டில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். தற்போது அங்கு பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நைபியு ரியோ உள்ளார். தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி கட்சியின் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சியை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு வரை இங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்த நிலையில் அதன்பிறகு அக்கட்சி சரிவை சந்திக்க தொடங்கியது.

காங்கிரஸ் எம்எல்ஏ இல்லாத நிலை
தற்போதைய சூழலில் நாகலாந்தில் காங்கிரஸ் எம்எல்ஏ இல்லாத நிலை உள்ளது. 2018 தேர்தலில் நாகா மக்கள் முன்னணி கட்சி 27 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும் 2021 ஆம் ஆண்டு ஆளும் கூட்டணியில் நாகா மக்கள் முன்னணி கட்சி இணைந்தது. கடந்த ஆண்டு இந்தக் கட்சியின் 21 எம்.எல்.ஏக்கள் ஆளும் கூட்டணியில் இணைந்து கொண்டனர். இந்த முறை பாஜக 20 இடங்களிலும் என்டிபிபி வேட்பாளர்கள் 40 இடங்களில் போட்டியிடுகின்றனர்.

மேகாலயா மாநில தேர்தல்
மேகாலயா மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி) 19 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 21 இடங்களில் வென்றது. பாஜக வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. ஐக்கிய ஜனநாயக கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான ஜனநாயக கூட்டணி பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் இந்த கூட்டணிக்கு 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிகபட்சமாக என்பிபி கட்சிக்கு 21 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

3 மாநில தேர்தல் முடிவுகள்
இந்த முறை தேசிய மக்கள் கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைக்கவில்லை தனித்தனியே போட்டியிடுகின்றன. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வலுவான கட்சியாக வளர்ந்துள்ளது. தற்போதைய முதல்வர் கான்ராட் சங்மாவிற்கும் முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவிற்கும் ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. 3 மாநில தேர்தல் முடிவுகளையும் டெய்லி ஹண்ட் லைவ் ஆக கவரேஜ் செய்கிறது. வெறும் எண்ணிக்கையை மட்டும் வெளியிடாமல் விரிவான மற்றும் துல்லியமான தகவல்களுடன் வெளியிடுகிறது. சாதாரண மக்கள் முதல் அரசியல் நிபுணர்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் துல்லியமாகவும் விரிவான தகவல்களை தேர்தல் முடிவுகளை வெளியிடுகிறது.

உடனுக்கு உடன் வெளியிடுகிறது
நேரலையாக தேர்தல் முடிவுகளை வெளியிடுகிறது. அதேநேரத்தில் துல்லியமாகவும் அட்டவணைப்படுத்தி தெளிவாக வெளியிட உள்ளது. கடந்த தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு தற்போதைய தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். எத்தனை சீட்களை கட்சிகள் கூடுதலாக பெற்றுள்ளன என்பதை மாநில வாரியாகவும் தொகுதி வாரியாகவும் வெளியிடுகிறது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துக்கள் மற்றும் ட்விட்டரில் டிரெண்டிங்கும் பகிரப்படும். லைவ் வீடியோக்கள், வைரல் மீம்ஸ்கள், டிரெண்டிங் ஸ்டோரிஸ், வீடியோஸ் என விரிவாக தேர்தல் முடிவுகளை டெய்லி ஹண்ட் உடனுக்கு உடன் வெளியிடுகிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications