Gen Z-ஐ விடுங்க.. உத்தரப் பிரதேசத்தில் காணாமல் போகும் பாஜக! புது பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இந்தியா டுடே வெளியிட்டிருந்த நாட்டின் மனநிலை கருத்துக்கணிப்பின்படி(MOTN), உத்தரப் பிரதேசத்தில் பாஜக பின்னடைவை எதிர்கொள்ளும் என்று தெரிய வந்திருக்கிறது. அடுத்த ஆண்டு உ.பியில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், இந்த கணிப்பு பாஜக தலைவர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. இந்த பின்னடைவுக்கு காரணம் என்ன? பாஜகவுக்கான சவால்கள் என்ன என்பது குறித்து தற்போது இந்தியா டுடே செய்தியை வெளியிட்டிருக்கிறது.

ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பில்தான் பாஜக பின்னடைவை சந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதற்கு முன்னர் ஜனவரி மாத கருத்துக்கணிப்பில், பாஜகவுக்கு செல்வாக்கு இருந்தது.

Bigger Concern for BJP

கருத்துக்கணிப்பில்.. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டால்.. இந்தியா கூட்டணி 41 இடங்களை கைப்பற்றும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாஜக கூட்டணி 38 இடங்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ளும் என்றும் கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.

நாடு முழுவதும் Gen Z இளைஞர்கள் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, உ.பியில் பாஜக பின்னடைவுக்கும் இந்த Gen Z இளைஞர்கள்தான் காரணம் என்று தோன்றலாம். ஆனால் முழு உண்மை அது கிடையாது. உண்மையான காரணம்.. உயர்சாதி மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்திதான்.

'பல்கலைக்கழக மானியக் குழு'(UGC) கொண்டு வந்துள்ள 'உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள் 2026' என்கிற விதிமுறைகள்தான் இந்த அதிருப்திக்கு காரணம். உயர்சாதி மாணவர்கள், இந்த விதிமுறைகள் தங்களுக்கு எதிரானது என்று கருதியுள்ளனர். எனவே உத்தரப் பிரதேசத்தின் உயர்சாதி பெற்றோர்கள், தற்போது பாஜகவுக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர்.

இது தவிர, வேலையில்லா திண்டாட்டம், போட்டி தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து Gen Z இளைஞர்கள் ஏற்கெனவே பாஜக மீது அதிருப்தியில் இருப்பதால், அத்துடன் இந்த அதிருப்தியும் சேர்ந்து.. கருத்துக்கணிப்பில் பாஜகவை பின்னுக்கு தள்ளியிருக்கிறது. எனவே இந்த பிரச்சனையை சமாளிக்க.. பாஜக மேலிடம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் ஆகியோர் இடஒதுக்கீடு எதிர்ப்பு அமைப்பினரை சந்தித்து பேசியிருக்கின்றனர். மட்டுமல்லாது.. யுஜிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யும் வரை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

பாஜக தற்போது ரெட்டை பிரச்சனையில் சிக்கியிருக்கிறது. தனது பாரம்பரிய உயர் சாதி வாக்குகளை இழக்கும் இடத்திற்கு வந்திருக்கிறது. இதை சரி செய்ய நினைத்தால் Gen Z இளைஞர்கள்.. பாஜக கதை முடித்துவிடுவார்கள். எனவே இரு தரப்பினரையும் பேலன்ஸாக கொண்டு போக வேண்டிய சூழலில் தற்போது மத்திய அரசு இருக்கிறது. மறுபுறம் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக மாற்றி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+