பஸ்ஸையே ”அலேக்”காய் தூக்கி இருவர் உயிரைக் காப்பாற்றிய புனே வாசிகள்!
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்தின் கீழே சிக்கிக் கொண்ட இருவரை மக்கள் பேருந்தையே புரட்டி காப்பாற்றிய சம்பவம் அங்கு பெரும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் கடந்த வெள்ளியன்று புனே மகா நகர் பரிவாகன் மகா மண்டல் கழகத்தை சேர்ந்த பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
அதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் பேருந்தின் கீழ் சிக்கிக்கொண்டனர்.
சிவப்பு விளக்கு சிக்னல்:
புனே நகரில் உள்ள க்யானேஸ்வர் படுக்கா சவுக் சிக்னலில் பேருந்து வந்துகொண்டிருந்த போது சிக்னலில் சிகப்பு விளக்கு போடப்பட்டது.
இரு சக்கர வாகனம்:
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் வேகமாக வந்த பேருந்து இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது.
பேருந்தில் மாட்டிய இருவர்:
இதில் அஸ்வின் தோஷி மற்றும் சித்தார்த் டுடு ஆகிய இருவரும் பேருந்துக்கு கீழே வகையாக சிக்கிக்கொண்டனர்.
அலேக்காய் தூக்கிய மக்கள்:
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சுதாரித்து ஏராளமானோரை துணைக்கு அழைத்து பேருந்தை அலேக்காக தூக்கினர். கிட்டதட்ட 50 பேர் இந்த செயலை செய்தனர்.
மீட்கப்பட்ட வாலிபர்கள்:
பொதுமக்களின் இந்த துணிச்சலான நடவடிக்கையால் பேருந்துக்கு கீழே இருந்த இருவரும், விரைவாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கப்பட்டனர்.
இருவரும் உயிர்பிழைப்பு:
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர்கள் இருவரும் அபாய கட்டத்தை தாண்டி நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
புத்திசாலி புனே வாசிகள்:
புனே மக்களின் இந்த புத்திசாலித்தனமான நடவடிக்கையால்தான் இரண்டு உயிர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டுள்ளன.
பெர்த் சம்பவ பாதிப்பு:
சமீபத்தில் இப்படித்தான் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபரை மீட்க ரயிலையே ஆயிரக்கணக்கான பயணிகள் சேர்ந்து கவிழ்த்து மீட்டனர். அதேபோல இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications