மனைவியை நேசிக்கிறவங்க இந்து மதத்திற்கு மாறுங்க: ‘கான்’ நடிகர்களுக்கு இந்து மகாசபை சவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாரூக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகியோர் இந்து மதத்திற்கு மாறவேண்டும் என்று இந்து மகாசபை வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதியும் பேசியும் வரும் இந்து மகாசபை, தனது வாராந்திர பத்திரிகையான இந்து சபா வார்த்தா-வில் எழுதிய தலையங்கத்தில் ஷாரூக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகியோர் உண்மையில் தங்கள் மனைவியை நேசிப்பவர்களாக இருந்தால் இந்து மதத்தைத் தழுவ வேண்டும் என்று சவால் விடுத்துள்ளது.

Now, Bollywood accused of ‘love jihad’

கான் நடிகர்கள் மனை

ஷாரூக் கானின் மனைவி கௌரி கான், அமீர் கான் மனைவி கிரண் ராவ், சயீஃப் அலி கான் மனைவி கரீனா கபூர் ஆகியோர் இந்துக்கள்.

பாலிவுட் நடிகர்கள்

இவர்கள் தவிர ஃபர்தீன் கான், இம்ரன் ஹஷ்மி ஆகியோரும் இந்து மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டுள்ளதால் அவர்களையும் தனது சவால் பட்டியலில் சேர்த்துள்ளது.

கான் நடிகர்களுக்கு சவால்

இது தொடர்பாக பத்திரிகையின் ஆசிரியர் முன்னா குமார் சிங் கூறுகையில், இது பாலிவுட்டின் கான் நடிகர்களுக்கு எங்களது சவால் ஆகும். இவர்கள் உண்மையில் தங்கள் மனைவியை நேசிப்பவர்களானால் அவர்கள் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.

லவ் ஜிகாதி

இந்துக்களுக்கும் இந்து நாட்டுக்கும் எதிராக சதி நடந்து வருகிறது என்று கூறிய அவர், நடிகைகள் ஷர்மிளா தாகூர், கரீனா கபூர், கௌரி, கிரண் ராவ், ரீனா தத், கவுரி சிப்பர் ஆகியோரை முன்னா குமார் சிங், ‘லவ் ஜிஹாதியால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று கூறியுள்ளார்.

புதிய சர்ச்சை

இந்து ராஜ்ஜியம் பற்றி பலரும் பேசி சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், ஷாரூக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகியோர் இந்து மதத்திற்கு மாறவேண்டும் என்று இந்து மகாசபை வலியுறுத்தியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+