மும்பையில் முஸ்லீம் என்பதால் இளம்பெண்ணை வீ்ட்டை காலி செய்ய வைப்பு
மும்பை: மும்பையில் குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முஸ்லீம் என்பதால் அவரை வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்தவர் மிஸ்பா காத்ரி(25). அவர் மும்பை வாதாலா பகுதியில் உள்ள சங்வி ஹைட்ஸ் அபார்ட்மென்டிஸில் வீடு வாடகைக்கு எடுக்க நினைத்து புரோக்கரை அணுகினார். புரோக்கர் மூலம் அவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அவர் முஸ்லீம் என்பதால் வீட்டை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மிஸ்பா கூறுகையில்,
நீங்கள் முஸ்லீம் என்பதால் வீடு வாடகைக்கு கிடைக்காது என்று புரோக்கர் என்னிடம் தெரிவித்தார். இது குஜராத்தில் தான் நடக்கிறது என்றால் மும்பையிலும் நடக்கிறது. நான் ஒரு முஸ்லீம் என்பதால் ஏதாவது பிரச்சனைகளை சந்தித்தால் அதற்கு புரோக்கரோ, அபார்ட்மென்ட் நிர்வாகமோ பொறுப்பில்லை என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு புரோக்கர் தெரிவித்தார்.
அதில் நான் கையெழுத்திட மறுத்த உடன் என்னை வீட்டை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து நான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜெஷான் அலி கான் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி முஸ்லீம் என்பதால் மும்பையைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனம் அவருக்கு வேலை அளிக்க மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications