ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்: பிரகாஷ் காரத்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து இடதுசாரிகள் பாடம் கற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று ஏற்கெனவே பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத், இளைஞர்களுடன் சமூக ஊடகங்கள் மூலமாக எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியிடம் இடது சாரிகள் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் கெஜ்ரிவாலை சில காலத்துக்கு முன்பு சந்தித்தேன். அவரது ஆம் ஆத்மி கட்சி மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்தாலும் அக்கட்சியின் கொள்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார் பிரகாஷ் காரத்.












Click it and Unblock the Notifications