”வணக்கம் இது கதிமான் எக்ஸ்பிரஸ்”- இனி ரயிலும் உங்களை வரவேற்கப் போகும் “ட்ரெயின் ஹோஸ்டஸ்”!
டெல்லி: ரயிலில் விமான பணிப்பெண்கள் போலவே பயணிகளைக் கவனித்துக் கொள்ள ரயில்வே பணிப் பெண்களை நியமிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
டெல்லி - ஆக்ரா இடையே அடுத்த மாதம் இயக்கப்பட இருக்கும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த புதிய சேவை அளிக்கப்பட இருக்கிறது.

இந்தப் புதிய ரயில் குறித்த அறிவிப்பு வரும் 25 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் வெளியிடப்பட இருக்கிறது.
கதிமான் எக்ஸ்பிரஸ்:
இதுகுறித்த அறிவிப்பில், "கதிமான் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் அதிகவேகமாக அதாவது 160 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய ரயிலாகும். இந்தியாவின் முதல் "செமி ஹை ஸ்பீடு" ரயிலான இதில் அவசரகால "பிரேக்"வசதி, தானியங்கி தீ எச்சரிக்கைக் கருவி, ஜிபிஎஸ் அடிப்படையில் இயங்கும் பயணிகள் தகவல் வசதி, "ஸ்லைடு" கதவுகள், நேரலை வசதியுடன் தொலைக்காட்சி வசதி உள்ளிட்டபணிப்பெண்கள்வை அடங்கும்.
ரயில் பணிப்பெண்கள்:
இவை அனைத்தையும்விட கூடுதலாக பயணிகளுக்கு வசதி செய்து தரும் வகையில் இந்த ரயிலில் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் பயணிகளை ரோஜாப் பூ கொடுத்து வரவேற்பது முதல் பயணித்தின்போது தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்கள்.
வடக்கும், தெற்கும்:
உணவுப் பட்டியலில் கோதுமை உப்புமா, மினி தோசை, காஞ்சிபுரம் இட்லி, பல்வேறு வகை பழங்கள், ஸ்விஸ் ரோல், சிக்கன் சாஸ், சிக்கன் ரோல், ஸ்பானிஷ் முட்டை உணவு, ஒயிட் ஆம்லேட், உலர் பழங்கள், வால்நட் கேக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 12 பெட்டிகள்:
12 பெட்டிகள் கொண்ட ரயிலில் டெல்லியில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் உள்ள ஆக்ராவுக்கு 105 நிமிடங்களில் செல்லும். சதாப்தி ரயிலில் சென்றால் சுமார் 120 நிமிடங்கள் வரை ஆகும்.
கட்டண விவரம்:
முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட இந்த ரயிலில் இருக்கை வசதி பயணக் கட்டணம் ரூபாய் 690, சிறப்பு வகுப்புக் கட்டணம் ரூபாய்1,365 ஆகும். அதே நேரத்தில் டெல்லி-ஆக்ரா இடையே பயணம் செய்ய சதாப்தி ரயிலில் இருக்கை வசதி பயணக் கட்டணம் ரூபாய் 540, சிறப்பு வகுப்புக் கட்டணம் ரூபாய் 1,040 ஆகும்.
மேலும் நகரங்கள்:
இதேபோன்ற கதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலை சென்னை-ஹைதராபாத், கான்பூர்-டெல்லி, சண்டிகர்-டெல்லி, நாகபுரி-பிலாஸ்பூர், கோவா-மும்பை, நாகபுரி-செகந்திராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications