For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹசாரே- கெஜ்ரிவால் இடையேயான நிதி மோதல் தொடர்பான வீடியோ வெளியீடு

By Mathi
Google Oneindia Tamil News

Anna hazare and Arvind kejriwal
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கும் சீடர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே நிதி முறைகேடு தொடர்பான மோதல் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவர இயக்கம் நடத்தினார் அன்னா ஹசாரே. இதில் முன்னணி நிர்வாகியாக இருந்தவர் அர்விந்த் கெஜ்ரிவால்.

பின்னர் அன்னா ஹசாரேவிடம் இருந்து விலகி ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கி டெல்லி சட்டசபை தேர்தலிலும் குதித்துவிட்டார் கெஜ்ரிவால். அவரது கட்சிக்கான நிதி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தமது பெயர் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டதாக அன்னா ஹசாரே புகார் கூறியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் விதமாக 2012ஆம் ஆண்டு கூட்டம் ஒன்றில் லோக்பால் மசோதா இயக்கத்தின் ரூ3 கோடி நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து ஹசாரே கேள்வி எழுப்பும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ரலேகான் சித்திக்கு தமது தூதுவரை அனுப்பி அன்னா ஹசாரேவை சமாதானப்படுத்தி வருகிறார் கெஜ்ரிவால்.

English summary
There is another twist in the ongoing rift between anti-corruption activist Anna Hazare and Aam Aadmi Party National Convener Arvind Kejriwal. A video recording of Anna Hazare in a meeting in December 2012 has emerged before the Delhi polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X