நாகா தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) இயக்கத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை
டெல்லி: அகன்ற நாகாலாந்து தனிநாடு கோரும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
மியான்மர், இந்தியாவில் உள்ள நாகா இனமக்கள் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து அகன்ற நாகாலாந்து (நாகாலிம்) என்ற தனிநாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடி வரும் அமைப்புகள் என்.எஸ்.சி.என் எனப்படும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில். இந்த அமைப்பு 1980களில் ஐசக் மூய்வா, மற்றும் கப்லாங் ஆகியோர் தலைமையில் 2ஆக பிளவுபட்டது.

இதில் மூய்வா தலைமையிலான அமைப்பினர் மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மோடி முன்னிலையில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் இந்த மூய்வா பிரிவு கையெழுத்திட்டிருந்தது.
ஆனால் கப்லாங் தலைமையிலான என்.எஸ்.சி.என். இயக்கத்தின் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மணிப்பூரில் அண்மையில் இந்த அமைப்பு நடத்திய தாக்குதலில் 18 ராணுவத்தினர் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில் கப்லாங் தலைமையிலான என்.எஸ்.சி.என். இயக்கத்துக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இயக்கத்தின் தலைவரான கப்லாங் சீனா அல்லது மியான்மர் எல்லையோரத்தில் தலைமறைவாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கப்லாங் பற்றி தகவல் தருவோருக்கு ரூ7 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications