என்டி ராமாராவ் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலி
Recommended Video

ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஹைதராபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
என்டி ராமாராவின் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தார். இவர் தனது ரசிகரின் திருமணத்துக்காக நெல்லூர் மாவட்டம் காவாலிக்கு காரில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது நல்கொண்டா மாவட்டத்தில் நார்கெட்பள்ளி- அட்டங்கி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இறந்ததாக அறிவிப்பு
இதையடுத்து அவர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தலையில் ரத்த காயத்துடன் மயக்கமான நிலையில் சாலையில் கிடந்தார். ரத்தம் சொட்ட சொட்ட அவரை காமினேனி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து இன்று காலை 7.30 மணிக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு முன்
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜானகிராமும் இதேபோலத்தான் ஒரு சாலை விபத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பலியானார்.

சோக முடிவு
2014 ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நல்கொண்டா மாவட்டம் அகுபமுலா அருகே ஹைதராபாத் - விஜயவாடா நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஜானகிராம் பலியானார். அவருக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.

படங்களில் நடித்துள்ளார்
இந்த நிலையில் மகனைப் போலவே என்டிஆர் ஹரிகிருஷ்ணாவும் சாலை விபத்தில் பலியாகியிருப்பது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரிகிருஷ்ணா முன்னாள் அமைச்சராவார். இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications