கர்நாடகாவில் ஆம்புலன்ஸில் படுத்தபடியே காதலனை மணந்த நர்ஸிங் மாணவி
பெங்களூர்: கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் ஆம்புலன்ஸில் படுத்தபடி தனது காதலனை திருமணம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பி.ஜி. கெரே கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நேத்ராவதி. இறுதியாண்டு நர்ஸிங் டிப்ளமோ படித்து வருகிறார். அவர் சல்லகெரேவை சேர்ந்த குருசாமி என்பவரை காதலித்தார்.
அமாவாசை அன்று அப்பகுதியில் பல ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க சித்துர்காவில் உள்ள முருகராஜேந்திர ப்ரிஹான் மடத்தின் தலைவர் முருகராஜேந்திர சாமி ஏற்பாடு செய்தார். அதில் கலந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள நேத்ராவதியும், குருசாமியும் முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேத்ராவதி தனது காதலருடன் சித்ரதுர்கா கோட்டையை சுற்றிப்பார்க்க சென்ற இடத்தில் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது முதுகு எலும்பில் அடிபட்டு படுத்தபடுக்கையாகிவிட்டார்.
இதையடுத்து அவரை பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் ஜூன் 5ம் தேதி சாமியார் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமணம் செய்யும் தனது விருப்பத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தார்.
அவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சித்ரதுர்காவுக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸில் படுத்தபடியே அவர் குருசாமியை மணந்து கொண்டார். இதையடுத்து நேத்ராவதி சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில மாதங்களில் நேத்ராவதியால் பழையபடி நடமாட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Kushbu: மகள் அவந்திகாவுக்கு திருமணம்! பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு- சுந்தர்.சி! மாப்பிள்ளை யார்? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications