சுவாமியே சரணம் ஐயப்பா.. இருமுடியுடன் சபரிமலையில் ஓபிஎஸ் பக்தி பரவசம்
சபரிமலை: தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருமுடி ஏந்தி சபரிமலை சென்று இன்று காலை ஐயப்பன் தரிசனம் செய்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தீவிர பக்திமான். ஊரில் ஒரு கோயில் விடாமல் வழிபடுபவர். அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் அவருக்கு மிகவும் பிடித்தமான கோயில் என்றால் கைலாசநாதர் கோயில். அங்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்வார். அத்துடன் குலதெய்வ வழிபாட்டிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குல தெய்வத்தை அடிக்கடி தரிசனம் செய்வார்.

அதுமட்டுமின்றி தனது சொந்த ஊரில் உள்ள பல கோயில்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். எப்போதும் அமைதியான சுபாவத்துடன் காணப்படும் ஓ பன்னீர்செல்வம் அப்படி இருக்க இறை நாட்டமும் காரணம் என்கிறார்கள்.

ஓ பன்னீர்செல்வம் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இன்று இருமுடியுடன் கோயிலை வந்தடைந்தார். சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்த அவர், அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications