அடுத்தடுத்து ஆபாச வீடியோக்கள் வரும்.. பாஜகவிற்கு ஆதரவு தந்த உடனேயே சுதீப்புக்கு வந்த சோதனை
பெங்களூரு: கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப், பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்தார். அப்படி அறிவித்ததிலிருந்து அடுத்தடுத்து சோதனைக்கு உள்ளாகி வருகிறார். ஆபாச படம் வெளியாகும் என சுதீப்புக்கு மிரட்டல் வந்திருக்கிறது.
மே 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. சொந்த கட்சியில் சீட் கிடைக்காதவர்கள் மாற்றுக்கட்சியில் சீட் கேட்பதால் கலகலத்துள்ளது. இதுதவிர யாரெல்லாம் நட்சத்திர பிரச்சாரக்காரர்களாக களம் இறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.

கர்நாடகாவில் கடந்த முறை பிடித்த வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்து, களத்தை அதிர வைத்திருந்தார் நடிகர் யாஷ். இம்முறை கேஜிஎப் நடிகர் யாஷை களம் இறக்குமா பாஜக என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில் புதிதாக பாஜகவிற்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்.
தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நான் ஈ திரைப்படத்தில் ஈக்களுக்கு எதிராக சண்டையிட்டு அப்லாஸ் வாங்கியவர் சுதீப். இந்நிலையில் கிச்சா சுதீப்பிடம், அரசியலில் உங்களை பார்க்கலாமா என்று கேள்விகள் வந்த போது, கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வந்திருக்கிறது என்று கூறிவந்தார். அதனால் சுதீப் பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி கர்நாடகாவில் சுழன்று கொண்டிருந்தது. இதற்கு அவரது ரசிகர்களே சுதீப் அரசியலுக்கு வேண்டாம் என்று ட்விட்டரில் டிரெண்டிங் செய்தனர்.
இந்த நிலையில் தான், பெங்களூருவில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் அமர்ந்த கிச்சா சுதீப், தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. ஆனால் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இக்கட்டான நேரத்தில் தனக்கு ஆதரவு அளித்தது பாஜக என்று கூறிய சுதீப், முதல்வர் பொம்மை தனக்கு காட்பாதர் என்று சொல்லி புல்லரிக்க செய்திருக்கிறார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பாஜகவின் சிந்தாந்தங்களை ஏற்கிறீர்களா என்று கேட்டனர். அதற்கு சுதீப், பிரதமர் நரேந்திர மோடியின் சில முடிவுகளை மதிக்கிறேன் என்றும் இங்கு அமர்ந்திருப்பதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

ஆனால் பிரச்சார அறிவிப்பிற்கு பதிலடியாக உங்கள் ஆபாச வீடியோக்களை வெளியிடுவோம் என சுதீப்பிற்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை தான் பெரிய ஹைலைட், யார் மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும், சினிமா துறையில் உள்ளவர்களிடம் இருந்தே இந்த மிரட்டல் வந்துள்ளது என்றும், இதற்கு பதிலடி கொடுப்பேன் என்றும் கொதித்துள்ளார்.
பாஜக கொள்கையை ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்த சுதீப், முன்பு பேட்டி ஒன்றில் இந்தி எல்லாம் தேசிய மொழி அல்ல என்று தடாலடியாக அறிவித்தார். இப்போது அதனை கோடிட்டு காட்டும் நெட்டிசன்கள் சிலர், ஆமாம் இந்தி கட்சிக்கு எப்படி பிரச்சாரம் செய்ய போறீங்க என்று கேட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். மறுபுறம் பாஜகவோ சுதீப் பிரபலமானவர் என்பதால் மக்களை கவருவார் என்று உறுதியாக நம்புகிறது. இதனிடையே காங்கிரஸ் கட்சி இதற்கு பதிலடியாக சினிமா நட்சத்திரங்களை களம் இறக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications