ஒடிஷா சிட் பண்ட் மோசடி: மும்பை மாடல் அழகி பிரீத்தி பாட்டியா கைது- பாலிவுட் நடிகைகளுக்கும் வலை?

மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடியின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் ஒடிஷாவை கதிகலங்க வைத்தது அர்தா தாத்வா சிட் பண்ட் மோசடி.
இந்த சிட் பண்ட் நிறுவனத்தில் அப்பாவி பொதுமக்கள் முதலீடு செய்த பணம் ஒடியா சினிமா துறையிலும் மற்றும் டெலிவிஷன் தொடர் தயாரிப்பிலும் ஈடுபட்ட நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக மாற்றப்பட்டு உள்ளது என புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சிட்பண்ட் மோசடி வழக்கில் மும்பையை சேர்ந்த மாடல் அழகியும் டெலிவிஷன் தொடர் தாயாரிப்பாளருமான பிரீத்தி பாட்டியாவும் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சன்னிலியோன் உள்ளிட்ட நடிகைகளுடன் பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்காக பல கோடி ரூபாய் பணத்தை ஒடிஷா சிட் பண்ட் நிறுவன முதலாளிகள் வாரி இறைத்தது அம்பலமானது.
கடந்த 18 நாட்களில் பிரீத்தி பாட்டியாவிடம் 4 முறை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக அவரது மும்பை வீடு மற்றும் அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று பிரீத்தி பாட்டியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் பிரீத்தி பாட்டியா என்பது குறிப்பிடத்தக்கது.
பிரீத்தி பாட்டியாவை தொடர்ந்து மும்பை பாலிவுட் நடிகைகள் பலரும் இந்த மோசடியில் அடுத்தடுத்து சிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications