ஒடிசாவில் மண்ணுக்கு அடியில் புதையல் கோட்டை! டன் கணக்கில் சிக்கிய தங்க சுரங்கங்கள்! வியந்த அதிகாரிகள்
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் 10 முதல் 20 மெட்ரிக் டன் மதிப்பிலான தங்கச் சுரங்கங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. முதற்கட்டமாக தியோகரில் உள்ள தங்கச் சுரங்கப் பகுதியை ஏலம் விடுவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது ஒடிசா அரசு.
ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் தங்க இருப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒடிசா மாநிலம் புதிய தங்கச் சுரங்க மையமாக உருவெடுத்து உள்ளது. அண்மையில் புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்தின.

ஒடிசா தங்க சுரங்கம்
தியோகர் (அடசா-ராம்பள்ளி), சுந்தர்கர், நவரங்பூர், கியோஞ்சர், அங்குல், கோராபுட் ஆகிய மாவட்டங்களில் தங்கப் படிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மயூர்பஞ்ச், மல்காங்கிரி, சம்பல்பூர், பௌத் ஆகிய பகுதிகளில் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த மார்ச் மாதம் சுரங்கத் துறை அமைச்சர் பிபுதி பூஷன் ஜெனா, இந்த கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தினார். ஒடிசா சட்டமன்றத்தில் இந்தத் தகவல் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
ஒடிசா தங்கக் கனிம வளம்
இது தொடர்பான அதிகாரப்பூர்வ மதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஆய்வாளர்கள் 10 முதல் 20 மெட்ரிக் டன் வரை இருப்பு இருக்கலாம் என மதிப்பிடுகின்றனர். இது இந்தியாவின் தங்க இறக்குமதி அளவுகளுடன் ஒப்பிடும்போது அதிகம் கிடையாது. ஆனாலும், கணிசமான முக்கியத்துவம் வாய்ந்தது.
கடந்த ஆண்டில் இந்தியா சுமார் 700-800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. 2020 நிலவரப்படி, நாட்டின் உள்நாட்டுத் தங்க உற்பத்தி மிகக் குறைவாகவே இருந்தது. ஆண்டுக்கு 1.6 டன்னாக மட்டுமே உள்நாட்டுத் தங்கம் கிடைத்தது.ஒடிசாவின் இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் தங்க கையிருப்பை பெரிய அளவில் மாற்றாது. ஆனாலும் வரும் காலங்களில் கூடுதல் சுரங்கங்களை கண்டுபிடிக்க ஒரு காரணமாக அமையும்.
சுரங்கத் துறையால் பொருளாதார வளர்ச்சி
10 முதல் 20 மெட்ரிக் டன் மதிப்பிலான தங்கச் சுரங்கங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. முதற்கட்டமாக தியோகரில் உள்ள தங்கச் சுரங்கப் பகுதியை ஏலம் (விடுவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது ஒடிசா அரசு.
ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் தங்க இருப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒடிசா மாநிலம் புதிய தங்கச் சுரங்க மையமாக உருவெடுத்து உள்ளது. அண்மையில் புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்தின.
இந்த தங்கப் படிவுகள் உறுதிப்படுத்தப்பட்டு, அதை எடுப்பது சாத்தியமானால், பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும். சுரங்கம், போக்குவரத்து, உள்ளூர் சேவைகள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். உள்கட்டமைப்பு முதலீடுகளும் உயரலாம். இது இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். இருப்பினும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் இருக்காது. இது ஒடிசாவின் கனிம ஏற்றுமதியை பல்வகைப்படுத்தும். ஒடிசா ஏற்கனவே இந்தியாவின் குரோமைட்டில் 96% கொண்டுள்ளது.
ஒடிசா வளர்ச்சி
பாக்சைட்டில் 52%, இரும்புத் தாதுவில் 33% இருப்புகளை ஒடிசா கொண்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் சுரங்கத் துறையில் ஒடிசாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும். தாதுவின் தரம், பிரித்தெடுக்கும் திறனைத் தீர்மானிக்க ஆய்வுகள் தேவை. ஆய்வகப் பகுப்பாய்வுகளும் முடிக்கப்பட வேண்டும். வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை மதிப்பிட தொழில்நுட்பக் குழுக்கள் கூட வேண்டும்.
எம்.எம்.டி.ஆர் சட்ட வழிகாட்டுதல்களின்படி வெளிப்படையான சுரங்கத் தொகுதி ஏலங்கள் நடத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல், சமூகத் தாக்க மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். சுரங்க நடவடிக்கைகளுக்குத் தேவையான சாலைகள், மின்சாரம், நீர் போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் முக்கியம்.
-
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications