ஃபேஸ்புக்கில் ஆபாச படம்: அவமானத்தில் தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவி
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் ஃபேஸ்புக்கில் தனது ஆபாச படங்கள் வெளியானதை பார்த்து அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிஷா மாநிலம் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது வீட்டுக்கு பின்புறம் குளிக்கையில் அதை அதே ஊரைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். தன்னுடன் உறவு கொள்ளாவிட்டால் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்து அந்த சிறுமி அவருடன் உறவு கொண்டுள்ளார்.
உறவு கொண்டதை புகைப்படம் எடுத்த அந்த வாலிபர் அதை தனது நண்பர்களிடம் காண்பித்ததுடன், ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை கிராம பஞ்சாயத்தாரை அணுகி நியாயம் கேட்டுள்ளார்.
பஞ்சாயத்தாரோ சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த வாலிபரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த வாலிபர் சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதற்கிடையே அந்த சிறுமி அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட சிறுமி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். அந்த வாலிபர் உள்ளூர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications