அத்தை மகனை காதலித்தது திருமண செய்தது ஒரு குத்தமா? புதுஜோடிக்கு கொடுத்த விநோத தண்டனை! ஷாக் வீடியோ
புவனேஸ்வர்: ஒடிசாவில் தங்களின் சமுதாய வழக்கத்தை மீறி அத்தை மகனை காதலித்து திருமணம் செய்த புதுஜோடிக்கு விநோத தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் அந்த தண்டனையை வழங்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
நம் நாட்டில் பல்வேறு கலாசாரங்களை கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு இடங்களில் மக்களின் வாழ்க்கை முறை, திருமண சடங்கு, சம்பிரதாயங்கள் மாறுபட்டதாக உள்ளது. நம் ஊர்களை எடுத்து கொண்டால் அத்தை, மாமா மகன், மகள்களை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உள்ளது.

ஆனால் ஒடிசாவில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் அத்தை, மாமன் மகள், மகன்களை திருமணம் செய்யக்கூடாது என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் அதனை மீறி ஒரு பெண் தனது மாமா மகனை காதலித்தார். அதாவது தனது தாயின் சகோதரனின் மகனை அவர் காதலித்தார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் என்பது அவர்களின் சமுதாய நம்பிக்கைக்கு எதிரானது. இதனால் புதுஜோடிக்கு அவர்கள் தண்டனை கொடுத்தனர். அதன்படி நிலத்தை உழவு செய்வதற்கான ஏர் வடிவமைத்து மாடுகளுக்கு பதில் அவர்களின் கழுத்தில் கலப்பையை கட்டி உழவு செய்ய வைத்து தண்டனை கொடுத்தனர்.
அதன்பிறகு கலப்பையை இருவரும் தோளில் சுமந்தபடி கிராமத்தில் உள்ள அவர்களின் கோவில்களுக்கு சென்றனர். அந்த கோவிலில் அவர்களுக்கு சில சடங்குகள் செய்யப்பட்டன. இதன்மூலம் அவர்களின் பரிசுத்தமானவர்களாக மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் நடந்துள்ளது.
இதற்கிடையே புதுமண ஜோடிக்கு கிராமத்தினர் கொடுத்த தண்டனை தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதுமண ஜோடியை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications