சென்னைக்கு வேலை தேடி வந்த மே.வங்க சகோதர்கள் 3 பேரும் பலி.. ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய ஆறாத ரணம்
புவனேஷ்வர்: தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் மூன்று பேர் கோரமண்டல் ரயில் விபத்தில் பலியாகியிருக்கின்றனர். இதனால், நிலை குலைந்து போயிருப்பதாகவும் என்ன செய்வதென்றே தெரியவில்லை எனவும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீருடன் கூறி வருகின்றனர்.
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன் தினம்( வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் ஷாலிமாரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது பயங்கர விபத்தில் சிக்கியது.

பெங்களூரில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த போது ரயில்கள் விபத்தில் சிக்கியதால் ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி சின்னாபின்னமாகின. ஒன்றன் மீது ஒன்று ஏறி பெட்டிகள் உருக்குலைந்து கிடந்தது.
விபத்தில் சிக்கிய 3 ரயில்களில் 2 ரயில்கள் பயணிகள் ரயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர். இந்த கோர விபத்தில், இதுவரை மொத்தம் 275 பயணிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இண்டெர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாறுபாடே காரணம் என கண்டறியப்பட்டு இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தற்போது தண்டவாளங்களை சீர் செய்து மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடும் ரயில்வே அறிவித்துள்ளது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் ஒடிசா ரயில் விபத்தால் தங்கள் நேசத்துக்கு உரியவர்களை பலி கொடுத்து விட்டு பலரும் கண்ணீருடன் ரணத்தை சுமந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததால் அவர்களது குடும்பம் நிலை குலைந்து போய் உள்ளது. நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்து இருக்கும் இந்த சோகம் குறித்த விவரம் வருமாறு:- மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்க்னாஸ் மாவட்டத்தில் உள்ள ஷரனைகாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரன் காயேன் ( வயது 40), நிஷிகாந்த் (35) திபாகர் (32).

சகோதர்களான இவர்கள் மூன்று பேரும் தமிழ்நாட்டில் கட்டுமானம் உள்ளிட்ட வேலை, உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். வருடத்தில் எப்போதாவது மட்டுமே சொந்த ஊருக்கு சென்று விட்டு வந்துள்ளனர். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாகத்தான் சொந்த ஊர் சென்று விட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பி வந்துள்ளனர். ரயில் விபத்தில் சிக்கியதால் மூன்று பேரும் பலியாகியுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்ததால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மூன்று பேரும் திருமணம் ஆனவர்கள். தற்போது மூன்று பேரும் இறந்து விட்டதால் அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் கண்ணீருடன் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். தெற்கு 24 பர்க்னாஸ் மாவட்டத்தில் மட்டும் 12 பேர் ஒடிசா ரயில் விபத்தில் பலியாகியிருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications