Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிசாவின் முதல் முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ! ஐஐஎம் டூ அரசியல்! பாஜகவை வீழ்த்திய சோபியா!

Subscribe to Oneindia Tamil

கட்டாக்: ஒடிசா சட்டசபை வரலாற்றில் முதன் முறையாக ஒரு முஸ்லிம் பெண் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யார் இவர்? எந்தக் கட்சி? எப்படி சாதித்தார்?

ஒடிசாவில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தல், அம்மாநிலத்தில் அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக அசைக்க முடியாத முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சி அங்கே அகற்றப்பட்டு, பாஜக முதல்முறையாக அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

odisha assembly election 2024 lok sabha election 2024

மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் போன்ற கொள்கைகளை முன்வைத்து அரசியல் செய்து வந்த மாநிலத்தில் வலதுசாரி அரசியல் வலுவாகக் காலூன்றியுள்ளது. அயோத்தி ராமரை வைத்து அரசியல் செய்த பாஜக, அங்கே பூரி ஜெகன்நாதரை முன்வைத்து அரியணையில் ஏறியுள்ளது.

பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் தமிழரான விகே பாண்டியன் டார்கெட் செய்யப்பட்டார். 'ஒரு தமிழர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?' என்று பாஜக முன்வைத்த கோஷம் மக்கள் மனதில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விகே பாண்டியன் முழுநேர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

odisha assembly election 2024 lok sabha election 2024

பாஜக வலுவாகக் காலூன்றி உள்ள ஒடிசாவில் வேறு சில அதிசயமும் நடந்துள்ளது. முதல்முறையாக ஒடிசாவில் முஸ்லிம் பெண் ஒருவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் யார்? அவர் பெயர் என்ன? சோபியா ஃபிர்தௌஸ். இவர் பெங்களூரு ஐஐஎம் முன்னாள் மாணவி.

தனது வெற்றியை, 'நாட்டிற்கும் சகோதரத்துவத்திற்கும் சொல்லப்பட்டுள்ள ஒரு செய்தி' என்று குறிப்பிட்டுள்ளார் இந்தப் பெண் எம்.எல்.ஏ சோபியா ஃபிர்தௌஸ்.

ஆரம்பக் காலங்களில் மிஷ்னரி பள்ளிக்கூடங்களில் படித்த இவர் , ஒரு முஸ்லிமாக இருந்தாலும் கட்டாக் பகுதியில் அதிகமாகக் கூடிவாழும் இந்து மக்களின் மத்தியில்தான் வளர்ந்தேன் என்கிறார்.

தன்னை 'பெருமைமிக்க ஒடிசா பிரஜை' என்று சொல்வதில்தான் மகிழ்ச்சி அதிகம் உள்ளதாகவும் கூறியிருக்கிறார். அப்படியே தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

odisha assembly election 2024 lok sabha election 2024

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாராபதி-கட்டாக் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட பிர்தௌஸ், சுமார் 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரான பூர்ண சந்திர மகாபத்ராவை தோற்கடித்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஃபிர்தௌஸ், "கட்டாக் மக்கள் 'சகோதரத்துவத்தை' நம்புகிறார்கள். வளர்ச்சிதான் முக்கியம்; மதத்திற்கு இடமில்லை என்பதை அவர்கள் நிரூபித்ததுள்ளார்கள்' என்று அவர் கூறியுள்ளார்.

"என்னைப் பொறுத்தவரை மதம் என்பது கண்ணுக்குத் தெரியாத சக்தி. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சமூகத்தினர் அனைவருக்கும் ஆன்மிகம் என்பது இன்றியமையாது. அப்படித்தான் நான் நம்புகிறேன். ஆன்மீகம் நம்மை ஒற்றுமையாக வைத்துக் கொள்ள வலிமையைத் தருகிறது" என்கிறார்.

32 வயதான இந்த எம்.எல்.ஏவுக்கு இந்து மதத்தில் நெருங்கிய நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிறார்.

"என் சிறு வயதில், நான் பள்ளியில் இந்து முறைப்படியான பிரார்த்தனைகளைச் செய்துள்ளேன். எனது பகுதியில் நடைபெறும் துர்கா பூஜையில் பங்கேற்று வருகிறேன். நான் வசித்து வரும் கட்டாக் சகோதரத்துவமான நகரம். பல்வேறு மதங்கள் சார்ந்த பண்டிகைகள் நடைபெறும் பகுதி.

ஆகவே, அனைத்து பண்டிகைகளில் நான் கலந்து கொண்டு வருகிறேன். அவற்றை அனுபவித்துள்ளேன்" என்கிறார் இந்தப் பொறியியல் பட்டதாரி ஃபிர்தௌஸ்.

சுமார் 90 ஆண்டுகால வரலாற்றில் ஒடிசா சட்டசபைக்கு இதுவரை 140க்கும் மேற்பட்ட பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட முஸ்லீம் பெண் இல்லை. "ஒடிசாவின் முதல் முஸ்லீம் பெண் எம்.எல்.ஏ என்ற டேக் தானாக வந்தது. அதற்காக இறைவனுக்கு நன்றி" என அவர் சொல்கிறார்.

பொறியியல் மற்றும் நிர்வாகப் பின்புலம் கொண்ட இவர், ஏன் அரசியலில் சேர்ந்தீர்கள் எனக் கேட்டதற்கு, தனது அப்பா முகமது மொகிம் ஒரு பிரபலமான காங்கிரஸ் தலைவர் என்பதால் அரசியல் நோக்கி ஈர்க்கப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+