திரண்டு வந்த பல லட்சம் பக்தர்கள்! குலுங்கிய ஒடிசா! பூரி ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரை உற்சாகம்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற 12ம் நூற்றாண்டை சேர்ந்த பூரி ஜெகன்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலமாக துவங்கியது. மூலம் ஜெகன்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்ரா ஆகியோர் புதிதாக உருவாக்கப்பட்ட தேரில் வீற்றிருக்க பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க பிரமாண்ட ரத யாத்திரை இன்று நடந்தது. இதில் ஒரே நேரத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று ‛ஜெய் ஜெகன்நாத்' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தியாவில் புகழ்பெற்ற ரத யாத்திரையில் முதலிடத்தில் இருப்பவது பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை தான். ஒடிசா மாநிலத்தின் அழகிய கடற்கரை நகரான பூரியில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக ரத யாத்திரை நடக்கும்.

இந்த ரதயாத்திரை இந்தியா மட்டுமின்றி உலக புகழ்பெற்றது. இதனால் ரத யாத்திரையை காண இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ரத யாத்திரையின் சிறப்பு என்பது ஒரே நேரத்தில் 3 தேர்கள் பவனி வருவது தான்.
அதாவது கோவில் மூலவர் ஜெகன்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் வலம் வருவார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 தெய்வங்களுக்கும் தனித்தனியே தேர்கள் வடிவமைக்கப்படும். ஜெகன்நாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா என்ற பெயரிலான தேர்கள் பயன்படுத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பூரி ஜெகநாதர் கோவில் திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கும் நிலையில் முதல்நாளான இன்று ரத யாத்திரை தொடங்கியது. அதன்படி மூலவர் ஜெகன்நாதர் 45 அடி உயர 16 சக்கர தேரிலும், சகோதரர் பாலபத்திரர் 44 அடி உயர 12 சக்கர தேரிலும், சகோதரி சுபத்ரா 43 அடி உயர தேரிலும் வலம் வந்தனர்.
இந்த ரத யாத்திரையை ஒடிசா ஆளுநர் கணேசி லால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பக்தர்கள் 3 தேரையும் வடம்பிடித்து இழுத்தனர். மேளதாளங்கள், பக்தர்களின் ஜெய் ஜெகன்நாத் கோஷங்களுக்கு நடுவே 3 தேர்களும் பவனி வந்தது. அதன்பிறகு 3 பேரும் 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்தை கோவிலான மவுசிமாவில் ஓய்வு எடுத்தனர்.
ஒடிசா மாநிலத்தில் தற்போது வெயில் கடுமையாக உள்ளது. அனல் காற்று வீசும் நிலையிலும் ரத யாத்திரையை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒடிசா, இந்தியாவின் பிற மாநிலங்கள் தவிர வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனால் பூரி நகரமே குலுங்கியது. இன்னும் 9 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையொட்டி இன்று காலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வாழ்த்து செய்தியை பகிர்ந்து இருந்தனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications