அயோத்தி ராமர் கோயில் மீது திடீரென பறந்த ராணுவ ஹெலிகாப்டர்.. ஆனா கடைசியில் பாருங்க.. பக்தர்கள் பரவசம்
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறும் நிலையில், அங்கே ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இது குறித்த வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள், திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ராமர் கோயில்: அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், ராம ஜென்ம பூமி கோவிலில் ஆரத்தி விழா தொடங்கியதும் ராணுவ ஹெலிகாப்டர்கள் அயோத்தியில் மலர்களைத் தூவி சென்றன. 30 இசைக் கலைஞர்கள் ராமர் கோவில் வளாகத்தில் பல்வேறு இந்திய இசைக்கருவிகளை வாசித்தனர். ஆரத்தி விழா தொடரும் போது அனைத்து விருந்தினர்களுக்கும் மணிகளை அடிக்கும் வகையில் அவர்களுக்கு மணிகளையும் கோயில் அதிகாரிகள் வழங்கி இருந்தனர்.
30 இசைக்கலைஞர்களும் ஒரே நேரத்தில் இசைக் கருவிகளை வாசித்தனர். அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மதியம் 12 மணிக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக மற்றும் மத தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொள்கின்றனர்.
கும்பாபிஷேகம்: இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் 121 ஆச்சார்யாக்கள் சடங்குகளை நடத்துவார்கள். கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் என்பவர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுகிறார். இதில் கலந்து கொள்ளும் முதன்மை ஆச்சார்யா காசியின் லக்ஷ்மிகாந்த் தீட்சித் ஆவார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அயோத்தி கோயில்: அயோத்தியில் அமைந்துள்ள இந்த ராமர் கோயில் நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 380 அடி; அகலம் 250 அடி மற்றும் உயரம் 161 அடியாகும். இதில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் உள்ளன. கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்களில் இந்து தெய்வங்கள், கடவுள்களின் சிற்பங்களைச் செதுக்கப்பட்டுள்ளன. கீழ்த் தளத்தில் உள்ள பிரதான கருவறையில், ராமரின் குழந்தை வடிவ சிலை இருக்கிறது.
ராமர் கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.. ராமர் கோயிலில் மொத்தம் ஐந்து மண்டபங்கள் உள்ளன - நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிராத்தன மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் ஆகியவை உள்ளன. மேலும், ராமர் கோயில் அருகே பண்டைய காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கிணறும் இருக்கிறது.. ராமர் கோயில் வளாகத்தின் தென்மேற்குப் பகுதியில் பகவான் சிவனின் பழமையான கோயில் ஜடாயுவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications