நவம்பர் 6ம் தேதி 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நீதிமன்றம் அனுமதி
நவம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் ஆறாம் தேதியன்று ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவிட்டது. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், "ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்ற 47 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்க மறுக்கிறது. நீதிமன்றம் அனுமதியளித்த பிறகும் அந்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறையின் அறிக்கையை காட்டி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது" என்று வாதிட்டார்.
அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின்னால், சூழல் மாறியிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டே மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் அணிவகுப்பு நடத்தாமல், உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க காவல் துறை தயாராக உள்ளது. ஆனால், மீதமுள்ள 24 இடங்களில் கூட்டத்திற்கோ, பேரணிக்கோ அனுமதி வழங்க முடியாது. பல இடங்களில் கனமழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளதால், வருவாய்த் துறை, காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது" என்று வாதிட்டது.
- ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பு ஏன்? ஆர்.எஸ்.எஸ். வரலாறு என்ன?
- காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள்
- ஆர்எஸ்எஸ் பற்றிய 64 பக்க புத்தகம் கர்நாடகத்தை அதிரவைப்பது எப்படி?
இதற்குப் பிறகு உளவுத் துறையின் அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மீதமுள்ள இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. "காவல் துறை தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன்பாக நடந்த குற்றச் சம்பவங்களையும், வழக்குகளையும்தான் காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஆகவே, ஏற்கனவே காவல்துறை அனுமதி வழங்கியிருந்த மூன்று இடங்களுடன் சேர்த்து மொத்தமாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது அணிவகுப்பை நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டார்.
ஆனால், "இந்த அணிவகுப்பில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனை மீறி நடந்தால் அதற்கு ஆர்.எஸ்.எஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும் இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த புதிதாக மனு அளிக்கலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்















Click it and Unblock the Notifications