நீயும் நானும் அன்பே.. வானின் எல்லை சென்று.. மனைவியின் ஹெலிகாப்டர் பயண கனவை நினைவாக்கி அசத்திய ரமேஷ்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ஹெலிகாப்டரில் பறக்க வேண்டும் எனஆசைப்பட்ட மனைவியின் ஆசையை தான் ஓய்வு பெறும் நாளில் நிறைவேற்றி உள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த ஆசிரியர் ஒருவர். 3லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றி உள்ளார் அந்த ஆசிரியர்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் சவராய் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்த் மீனா. இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சோமோதி. ஆசிரியரின் மனைவி சோமோதி தனது கணவர் ரமேசுடன் ஒரு நாள் வீட்டின் மொட்ட மாடியில் நின்று கொண்டு வானத்தை பார்த்தபடி இருந்தார். அப்போது ஒரு ஹெலிகாப்டர் அவர் வீட்டை கடந்து பறந்து சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த சோமோதி தனது கணவர் ரமேஷ் இடம் ஹெலிகாப்டரில் பறக்க எவ்வளவு செலாவகும் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு நாள் என்னை அதில் அழைத்து செல்வீர்களா என்று கேட்டுள்ளார். அதன்பிறகு அவர் அந்த விஷயத்தை பற்றி அவர் மறந்துவிட்டார்.

On retirement day, rajasthan teacher fulfilled his wife chopper ride dream

இதை பலநாளாக நினைவில் வைத்திருந்த ஆசிரியர் ரமேஷ் தனது மனைவியை எப்படியாவது ஹெலிகாப்டரில் பறக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். பணி ஓய்வு பெறும் நாளான நேற்று பள்ளியில் இருந்து அவர்களின் வீடு இருந்த மாலவலி கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.

ராஜஸ்தான் பராம்பரிய உடையில் மனைவி மற்றும் பேரனுடன் ஹெலிகாப்டரில் அவர பறந்தார். 22 கிலோமீட்டர் துரப் பயணத்துக்காக அவர் ரூ.3லட்சத்து 70 ஆயிரம் செலவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ரமேஷ் கூறுகையில், டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரை வரவழைத்தேன். எனது மனைவியின் விருப்பத்தை பணி ஓய்வு நாளில் நிறைவேற்ற இருப்பது குறித்து தெரிவித்ததும் மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளித்தது. இந்த 18 நிமிட ஹெலிகாப்டர் பயணத்தை நானும் என் மனைவியும் வெகுவாக ரசித்தோம். மிகுந்த மகிழ்ச்சி அளித்தது" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+