கங்கையின் நதி மூலம் எது?... கண்டுபிடிக்க உமா பாரதி உத்தரவு
டெல்லி: கங்கையின் உண்மையான பிறப்பிடத்தை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கண்டுபிடிக்குமாறு விஞ்ஞானிகளிடம் மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பித்தல் அமைச்சரான உமா பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.
புனித நதிகளுள் ஒன்றான கங்கை நதி கங்கோத்ரி அருகே உள்ள கோமுக்கில் உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது. மிகச் சிறிய சுனையான அங்கிருந்தே கங்கை நதி உற்பத்தியாவதாக மக்கள் நம்பி வருகின்றனர். ஆனால், கங்கையின் உண்மையான பிறப்பிடம் அதுவல்ல என்றும், அது கங்கை கைலாஷ மலையில் உள்ள மானசரோவர் ஏரியில் இருந்து உற்பத்தியாவதாகவும் சிலர் கூறுகின்றனர்.

எனவே, இவை இரண்டில் எது உண்மை என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரூர்கியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹைரோலஜி விஞ்ஞானிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பித்தல் அமைச்சரான உமா பாரதி உத்தரவிட்டுள்ளார்.
வாட்டர் ஐசோடோப்ஸ் ட்ரேசர் என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு கங்கையின் உண்மையான பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதற்கென ஒரு ஆய்வு ஒன்றையும் அவர்கள் தொடங்கியுள்ளனர். அதன்படி, மானசரோவர் ஏரியில் இருந்து தண்ணீர் மாதிரிகளை எடுத்து வந்து, அவற்றைக் கங்கை நீருடன் ஆய்வு செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான முந்தைய ஆய்வுகளில் கங்கையின் பிறப்பிடம் கங்கோத்ரி என்றே தெரிய வந்துள்ளது. எனவே, புதிய கோணத்தில் தொடங்கியிருக்கும் இந்த ஆய்வு நிச்சயம் சவாலானதாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தேசிய ஹைட்ராலஜி கழக இயக்குநர் ஆர்.டி. சிங் கூறுகையில், ‘இந்தப் புதிய ஆய்வில் மானசரோவர் ஏரிக்கும், கங்கைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயப்படும். இந்த ஆய்வின் மூலம் கங்கை நதியின் மூலம் கண்டறியப்படும்' என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications