பில்லியனாராக வலம் வந்த சத்யம் ராஜூவின் ஒருநாள் சம்பளம் ரூ. 50!
ஹைதராபாத்: பில்லியனராக வலம் வந்து, வரவு செலவு கணக்கில் மோசடி செய்ததற்காக தற்போது சிறை தண்டனை அனுபவித்துவரும் சத்யம் ராஜூவின் ஒரு நாள் சம்பளம் தற்போது ரூ. 50 ஆகும்.
கடந்த 2009ம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம், அதன் வரவு செலவு கணக்கில் பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான அந்நிறுவனத்தின் தலைவர் பி.ராமலிங்க ராஜூ மீது புகார் அளிக்கப் பட்டது.

இது நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி எனக் கூறப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சத்யம் கப்யூட்டர்ஸ், தனது பங்குதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ கூறியது.
இது தொடர்பாக ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர்கள் ராம ராஜூ, சூரிய நாராயண ராஜூ, சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வண்ட்லமணி சீனிவாஸ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஹைதராபாத் சிபிஐ தனிக்கோர்ட், குற்றம் சாட்டப்பட்ட 10 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதோடு, ராமலிங்க ராஜூவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப் பட்ட ராமலிங்க ராஜூவுக்கு கைதி எண் 4148 வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அவர் செய்து வரும் வேலைக்கு நாளொன்றுக்கு ரூ. 50 ஊதியமாக வழங்கப் படுகிறதாம்.
அந்தப் பணத்தில் ரூ. 25 ஐ மட்டுமே அவர் பயன் படுத்திக் கொள்ள முடியும். மீதிப்பணம் அவரது வங்கிக் கணக்கில் சேமிக்கப் படும்.
எனவே, அவர் தனது ஊதியத்தில் கிடைக்கும் பணத்தில் தனக்குத் தேவையான டூத் பேஸ்ட் , பிஸ்கட், பிரட் மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவைகளை சிறை கேண்டின் மூலம் பெற்றுக் கொள்வதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications