கொல்லம் கோர்ட் அருகே ஜீப்பில் குண்டு வெடிப்பு.. ஒருவர் காயம்! போலீஸ் குவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் நகர கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொழிலாளர் நலத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் சக்தி குறைந்த குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லத்தில் கலெக்டர் அலுவலகத்தை ஒட்டியே மாவட்ட நீதிமன்றமும் அமைந்துள்ளது. இதனால் இந்த தாக்குதல் எந்த இலக்கை குறி வைத்து நடத்தப்பட்டது என்பதில் சந்தேகம் உள்ளது.

தகவல் அறிந்ததும் போலீசாரும், வெடிகுண்டு ஆய்வு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 7 பேட்டரிகளும், 13 பியூஸ் வயர்களும் சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே இது டைம் பாம் வகை வெடிகுண்டு என்று தெரியவந்துள்ளது.

மோப்ப நாய்களும் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. சக்தி குறைந்த குண்டு என்பதால் அதிருஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சி வந்த பிறகு நடைபெற்ற பெரிய அளவிலான தாக்குதல் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications