Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லை பாதுகாப்பு படை உடன் இணையும் ஒன் இந்தியா.. நாட்டை காக்கும் பாதுகாவலர்களுக்கு ஒரு சல்யூட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் மிகப்பெரிய எல்லைப் பாதுகாப்புப் படையான, இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையுடன் (BSF) ஒரு மைல்கல் பார்ட்னர்ஷிப்பை அறிவிப்பதில் ஒன் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

இந்த தனித்துவமான டிஜிட்டல் பார்ட்னர்ஷிப், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க தன்னலமின்றி சேவை செய்யும் பிஎஸ்எஃப் வீரர்களின் அசாதாரண கதைகள், துணிச்சலான பணிகள் மற்றும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் தியாகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல பத்தாண்டுகளாக இந்த துணிச்சலான கதைகள் பல சொல்லப்படாமல் உள்ளன. இப்போது இதன் மூலம், ஒன்இந்தியா அவற்றை நாடு முழுவதும் பரப்ப உறுதி பூண்டுள்ளது.

OneIndia Joins Hands with BSF to Salute India s Bravest A Digital Tribute to Border Heroes

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஒன்இந்தியா தனது விரிவான டிஜிட்டல் ஈகோசிஸ்டத்தைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் 360 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடையும். செய்திகள் பல இந்திய மொழிகளில் வழங்கப்படும், இது இரண்டாம் அடுக்கு - 3ஆம் அடுக்கு நகரங்களுக்கு அப்பால் வளர்ந்து வரும் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும், சீருடையில் உள்ள பாதுகாப்புப் படை வீரர், வீராங்கனைகளின் பயணங்களை ஆழமாக கொண்டு சேர்க்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.

சக்திவாய்ந்த ஷார்ட் வீடியோக்கள் மற்றும் ரீல்கள் முதல் ஆழமான கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் நேரடி நிகழ்வு ஒளிபரப்பு வரை - ஒன்இந்தியா BSF இன் துணிச்சலின் பாரம்பரியத்தை இந்தியர்களுக்கு நெருக்கமாக வெளிப்படுத்தும். இந்த விவரிப்புகள் வெறும் தகவல்களாக மட்டுமல்லாமல், அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும். கடுமையான சூழ்நிலைகளில் 24x7 நம் நாட்டைக் காப்பதற்காகப் பணியாற்றும் போர்வீரர்களை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கும்.

2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட OneIndia.com இந்தியாவின் மிகவும் நம்பகமான பன்மொழி டிஜிட்டல் செய்தி தளங்களில் முன்னணியில் இருக்கிறது. ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, குஜராத்தி மற்றும் ஒடியா ஆகிய 8 இந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை வழங்குகிறது. 150 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர யுனிக் யூசர்கள் மற்றும் 3 பில்லியனுக்கும் அதிகமான பேஜ் வியூஸ் உடன், OneIndia ComScore ஆல் இந்தியாவின் முதல் 10 செய்தி இணையதளங்களில் தொடர்ந்து தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

தரமான உள்ளடக்கம் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் ஈர்க்கக்கூடிய டிஜிட்டல் நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற ஒன்இந்தியா, நிபுணர்களின் நேர்காணல்கள், அரசியல் விவாதங்கள், விளக்கம் அளிக்கும் செய்திகள் மற்றும் ஆழமான அனலைஸிங் கட்டுரைகளை தினமும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

எல்லைப் பாதுகாப்பு படை உடனான இந்த கூட்டிணைவு, மதிப்புமிக்க பத்திரிகை ஊடகத்துக்கான ஒன்இந்தியா-வின் அர்ப்பணிப்பையும், மக்களுடன் அவர்களின் சொந்த மொழியில் - முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மற்றும் ஊக்கமளிக்கும் ஹீரோக்களின் கதைகளைச் சொல்வதற்கான அதன் நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

நமது எல்லைகளைப் பாதுகாப்பாகவும், நமது தேசத்தை வலுவாகவும் வைத்திருக்கும் துணிச்சல் வீரர் வீராங்கனைகளின் கதைகளைக் காண, ஒன்இந்தியா மற்றும், எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் ஒவ்வொரு இந்தியரையும் அழைக்கிறோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+