பவானியை மனித வெடிகுண்டாக நினைத்து காப்பாற்ற முன்வராத மக்கள்!
பெங்களூரு: பெங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது படுகாயமடைந்து கீழே விழுந்த பவானியை, மனித வெடிகுண்டு என்று கருதிய அக்கம் பக்கத்தினர் அவருக்கு அருகில் செல்ல தயங்கி நின்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அவரது உறவினரான கார்த்திக் விளக்கிய பிறகுதான் அவரைக் காப்பாற்றும் முயற்சிகள் நடந்துள்ளது. இந்தத் தாமதம், ஆம்புலன்ஸில் கூட்டிச் செல்லாமல் ஆட்டோவில் கூட்டிச் சென்றது, இதன் காரணமாக அதிக அளவில் ரத்தம் வெளியேறியது ஆகிய காரணங்களால்தான் பவானி உயிரிழந்துள்ளார் என்று கருதப்படுகிறது.

விடுமுறையைக் கொண்டாட தனது பிள்ளைகளுடன், பெங்களூரு சென்றிருந்தபோது சர்ச் சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி பவானி உயிரிழந்தார். குண்டுவெடிப்பில் சிக்கி அவர் படுகாயமடைந்து கீழே விழுந்துள்ளார். அவரது மைத்துனர் மகன் கார்த்திக்கும் இதில் காயமடைந்தார்.
கீழே விழுந்த பவானியின் தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. அவர் கீழே விழுந்த சமயத்தில் அந்த, இடத்தில் பலர் இருந்துள்ளனர். ஆனால் குண்டுவெடித்ததும், அதில் பவானி அதிக அளவிலான காயத்தை அடைந்ததையும் பார்த்த அவர்கள் அவர் மனித வெடிகுண்டாக இருக்கலாமோ என்று சந்தேகம் அடைந்து அருகில் வராமல் இருந்துள்ளனர்.
இதனால் ரத்தம் கொட்டிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார் பவானி. இந்த நிலையில்தான் முதுகில் காயமடைந்த நிலையில் கிடந்த கார்த்திக் சுதாரித்து விழுந்து கிடப்பது தனது சித்தி என்று கூறி விளக்கிய பிறகே அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் நரசிம்மா விரைந்து வந்து தனது ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்.
ஆனால் அதற்குள் அதிக அளவிலான ரத்தத்தை இழந்து விட்டார் பவானி. தலையில் ஏற்பட்ட காயம், அதிக ரத்தம் வெளியேறியது ஆகிய காரணங்களால் டாக்டர்களால் பவானியை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications