தமிழகத்தில் இனி ஒரு ஆசிரியருக்கு மட்டுமே தேசிய விருது.. குண்டை போட்ட மத்திய அரசு
தமிழகத்தில் இனி ஒரு ஆசிரியருக்கு மட்டுமே தேசிய விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் இனி ஒரு ஆசிரியருக்கு மட்டுமே தேசிய விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஒரு ஆசிரியர் மட்டுமே நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்களின் பெயர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால்
தமிழகத்தில் பரிந்துரைக்கப்பட்ட 6 ஆசிரியர்களில் கோவை ஆசிரியர் சக்தி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் விருதுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் தமிழகத்திற்கு வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கையும் குறைந்தது












Click it and Unblock the Notifications