சச்சின் பைலட்டின் பதவி "மட்டும்" பறிப்பு.. கட்சியில் இருந்து நீக்காதது ஏன்? காங்கிரஸ் போட்ட திட்டம்!

Subscribe to Oneindia Tamil

ராஜஸ்தான்: சச்சின் பைலட்டின் துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் தலைவர் பதவி பறிக்கப்பட்டாலும் கூட இன்னும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை.

ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அங்கு அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் களமிறங்கினார். இது கட்சிக்குள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Recommended Video

    Sachin Pilot has been removed as Rajasthan Deputy Chief Minister

    இதனால் காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இரண்டு பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு இருக்கிறார் .

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    சச்சின் பைலட்டின் துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் தலைவர் பதவி பறிக்கப்பட்டாலும் கூட இன்னும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. கட்சிக்குள் இன்னும் அவர் உறுப்பினர்தான். இன்னும் அவர் காங்கிரஸ் எம்எல்ஏதான். அதேபோல் இன்னொரு பக்கம் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் நீக்கப்படவில்லை. இவர்களின் பதவி மட்டுமே பறிக்கப்பட்டுள்ளது.

    நிலைமை என்ன

    நிலைமை என்ன

    இவர்களை கட்சியில் இருந்து நீக்கினால் கூட அல்லது தகுதி நீக்கம் செய்தால் கூட காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து கிடையாது. இவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க 92 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதும். காங்கிரஸ் தரப்புக்கு தற்போது 102 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதனால் அங்கு ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை.

    ஆனாலும் இல்லை

    ஆனாலும் இல்லை

    ஆனாலும் கூட சச்சின் பைலட் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லபடுகிறது. அதில் முதல் காரணம் அவர் உண்மையில் கட்சிக்காக பெரிய அளவில் உழைத்து இருக்கிறார். வெறும் 21 எம்எல்ஏக்கள் இருந்த ராஜஸ்தானில் 119 எம்எல்ஏக்கள் கொண்டு வர அவரின் உழைப்பு முக்கிய காரணம். இப்படி இருக்கும் நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கினால் அது சரியாக இருக்காது.

    என்ன நட்பு

    என்ன நட்பு

    அதேபோல் ராகுல் காந்திக்கும் சச்சின் பைலட்டிற்கும் நல்ல நட்பு இருக்கிறது. மேலும் சச்சின் பைலட் மீது ராகுல் காந்தி பெரிய அளவில் நம்பிக்கையும் வைத்து இருந்தார். பிரியங்கா காந்தியும் கூட சச்சின் பைலட்டிற்கு நெருக்கம்தான். நேற்று சச்சின் பைலட் உடன் பிரியங்கா போனில் கூட பேசினார். இந்த நட்பு மற்றும் தொடர்பு காரணமாகவே சச்சின் பைலட் இன்னும் நீக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

    தொண்டர்கள் எதிர்ப்பு

    தொண்டர்கள் எதிர்ப்பு

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்குள் சச்சின் பைலட் பதவி நீக்கம் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டால் அது காங்கிரஸ் தொண்டர்களை கோபத்திற்கு உள்ளாக்கும். மற்ற இளம் தலைவர்கள் கட்சிக்கு எதிராக திரும்ப வாய்ப்புகள் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தீவிரமாக யோசித்து வருகிறது.

    பாஜக நினைப்பு

    பாஜக நினைப்பு

    அதேபோல் இன்னொரு பக்கம் சச்சின் பைலட் பாஜகவில் இணையலாம் என்று ராஜஸ்தான் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பின் அமித் ஷாவின் அசத்தல் வழிகாட்டுதல் உள்ளது என்கிறார்கள். இதனால் பாஜகவிற்கு அந்த வாய்ப்பை கொடுக்க கூடாது. அப்படி நடந்தால் ஆட்சி கவிழ கூட வாய்ப்பு உள்ளது. இன்னொரு ஆபரேஷன் கமலாவிற்கு வழி வகுக்க கூடாது என்று காங்கிரஸ் அமைதியாக உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+