கலாபவன் மணி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை.. உம்மன் சாண்டி உறுதி
சாலக்குடி: நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். கலாபவன் மணி வீட்டுக்கு இன்று சென்று துக்கம் விசாரித்த பிறகு இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, மார்ச் 6ம் தேதி மரணமடைந்த, 45 வயதான கலாபவன் மணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில், சாலக்குடியிலுள்ள அவரின் வீட்டுக்கு, முதல்வர் சாண்டி இன்று சென்றார்.

உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய சாண்டியிடம், கலாபவன் மணி சாவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். தடயவியல் ஆய்வு அறிக்கை வந்த உடன், உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உம்மன் சாண்டி அப்போது உறுதியளித்தார்.
ஹைதராபாத்திலுள்ள தடயவியல் ஆய்வகத்தில், கலாபவன் மணி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் விஷம் கலந்திருந்ததா என்பதற்கான விடை ஆய்வு முடிவில் தெரியவரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications