Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.-ஐ.ஜனதா தளம் கூட்டணிகளிடையே 'டப் ஃபைட்'- கருத்து கணிப்புகள்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டணிக்கும் இடையேயான சமமான போட்டி நிலவுவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பீகார் சட்டசபைக்கு அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவையும் பா.ஜ.க. தலைமையில் லோக் ஜனசக்தி, அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஆகியவை இடம்பிடித்துள்ளன.

கடும் போட்டி

கடும் போட்டி

இந்த இரு அணிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பீகார் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு ஆதரவாகவும் உயர்ஜாதி மற்றும் தாழ்த்தப்பட்டோர் பா.ஜ.க. அணிக்கு ஆதரவாகவும் இருப்பதால் இரு அணிகளிடையே கடும் போட்டி நீடிக்கிறது.

டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு

டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு

பீகார் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் இதையே வெளிப்படுத்தியுள்ளன. டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் சி வோட்டர் அமைப்பும் இணைந்து பீகார் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பை நடத்தின. இதில் 7,786 பேர் பங்கேற்றனர்.

நெக் டூ நெக்

நெக் டூ நெக்

இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 117 இடங்கள் கிடைக்கும். ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு 112 இடங்கள் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு 14 இடங்கள் கிடைக்கும்.

1% வித்தியாசம்

1% வித்தியாசம்

அதாவது 2 கூட்டணிகளுக்கும் இடையிலான வாக்கு விகிதத்தில் 1 சதவீதம்தான் வித்தியாசம் உள்ளது. மொத்தம் பா.ஜ.க. கூட்டணிக்கு 43% வாக்குகளும், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு 42% வாக்குகளும் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

நிதிஷூக்கே ஆதரவு

நிதிஷூக்கே ஆதரவு

அதே நேரத்தில் 46.8% பேர் முதல்வராக மீண்டும் நிதீஷ்குமாரே வர வேண்டும் என்று கூறியுள்ளனர். பா.ஜ.கவின் சுஷில்குமார் மோடிக்கு 16%, முன்னாள் முதல்வர் மாஞ்சிக்கு 6.7% பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

மற்றொரு கணிப்பு

மற்றொரு கணிப்பு

இதேபோல் இந்தியாடிவி- சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணிக்கு 109 முதல் 125 இடங்கள் கிடைக்கும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு 104 முதல் 120 இடங்கள் கிடைக்கும் என்றும் முடிவுகள் வந்துள்ளன. இதர கட்சிகளுக்கு 10 முதல் 18 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+