”தொப்பி அணிந்தாலும் குற்றம் குற்றமே”- கெஜ்ரிவாலுக்கு திருநங்கை விட்ட நோட்டீஸ்
வாரணாசி: பிரச்சாரத்தின் போது ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், தன்னுடைய கட்சிப் பெயர் எழுதப்பட்ட தொப்பி அணிந்து வந்ததால்,அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் வாரணாசியில் போட்டியிடுகின்றார் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
அவர் பிரசாரத்தின் போது "ஆம்ஆத்மி" என்று எழுதப்பட்ட தொப்பி அணிந்து வந்ததை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடும் திருநங்கையான கமலா விளக்கம் கேட்டு கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மோடியும்,கெஜ்ரியும் மோதல்:
பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

”ஆம் ஆத்மி” தொப்பி:
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் கெஜ்ரிவால் வாரணாசியில் தேர்தல் பிரசா ரம் மேற்கொண்டார். அப்போது அவர் "ஆம் ஆத்மி" என்று எழுதப்பட்ட தொப்பியை அணிந்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இருவரையும் எதிர்த்து திருநங்கை:
இதையடுத்து, வாரணாசியை சேர்ந்த கமலா என்ற திருநங்கை மோடியையும் , கெஜ்ரிவாலையும் எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

தகுதியற்று நடக்கும் கெஜ்ரிவால்:
மேலும் அவர் "பிரசாரத்தின் போது கெஜ்ரிவால் "ஆம் ஆத்மி" என்று எழுதப்பட்ட தொப்பி அணிந்து வந்தார். கெஜ்ரிவால் சாதரண மக்களை போல தகுதியற்ற செயலை செய்கிறார். அவரை அவரே அடையாளம் காட்டிக் கொள்கிறார்" என்று கூறியுள்ளார்.

கெஜ்ரிக்கு நோட்டீஸ்:
இது தொடர்பாக கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான விளக்கத்தை 15 நாட்களுக்குள் கெஜ்ரிவால் கொடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இல்லாவிட்டால் கெஜ்ரிவால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications