எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தொடங்கிய உடனேயே லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி தெலுங்குதேசம் எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் இந்த கூச்சலால் லோக்சபாவில் பெரும் குழப்பம் நிலவியது.
இதையடுத்து எதிர்கட்சிக்களின் இந்த தொடர் அமளியால் லோக்சபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு நாளை கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications