ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம்.. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 16வது நாளாக முடங்கியது ராஜ்யசபா
ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு பிரச்சனையை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்ய சபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என அறிவித்தார். இதையடுத்து நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மோடியின் இந்த திடீர் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள்முதல் ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப்பெறக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டத்தொடர் தொடங்கி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபாவில் முழக்கமிட்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து பகல் 12 மணி வரை ராஜ்ய சபா ஒத்திவைக்கப்படுவதாக குடியரசு துனை தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்தார். பின்னர், 12 மணிக்குப் பிறகு ராஜ்யசபா மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 3 மணிக்கு ராஜ்ய சபா மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. குளிர்காலக் கூட்டத் தொடரில் ராஜ்ய சபா 16வது நாளாக இன்றும் முடக்கப்பட்டுள்ளது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications