நான் ஜெயலலிதாவின் மகள் என்பது துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரியும்.. அம்ருத்தா பரபர!
ஜெயலலிதாவின் மகள் தான்தான் என்பது துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரியும் என அம்ருத்தா தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: ஜெயலலிதாவின் மகள் தான்தான் என்பது துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரியும் என அம்ருத்தா தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் என உச்சநீதிமன்றத்தில் பெங்களூரை சேர்ந்த அம்ருத்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதற்கான டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் தங்கள் குடும்ப வழக்கப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவித்தவிட்டது. ஜெயலலிதா பெற்றெடுத்த மகள் தான் தான் என கூறி ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார்.

வளர்ப்பு தந்தை சொன்ன உண்மை
இதையடுத்து தமிழ் தொலைக்காட்சிகள் அவரை வரிசைக் கட்டி நேர்காணல் செய்து வருகின்றனர். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது வளர்ப்பு தந்தையான பார்த்தசாரதி தான் இறக்கும் போது இந்த உண்மையை சொன்னதாக அம்ருத்தா கூறினார்.
|
ஓபிஎஸ்க்கு தெரியும்
மேலும் தனது உறவினர்களும் தான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறியதாக தெரிவித்தார். நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

அவரது அன்பை புரிந்துகொள்ளவில்லை
ஜெயலலிதா தன்னை தாயன்புடன்தான் கட்டி தழுவியுள்ளார் என்ற அவர் ஆனால் நான்தான் அதனை புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறினார். சசிகலாவுக்கு பயந்துதான் ஜெயலலிதா தன்னை மறைத்து வளர்த்ததாகவும் வேறு யாராலும் அச்சம் இல்லை என்றும் அம்ருத்தா கூறினார்.

தங்கை மகள் என மறைத்து..
ஜெயலலிதாவை போயஸ் கார்டன், தலைமைச் செயலகம், சிறுதாவூர் பங்களா, திராட்சை தோட்டம் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும் அவர் கூறினார். ஜெயலலிதாவின் தங்கை மகள் என்று கூறியே தன்னை மறைத்து வளர்த்து வந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

உண்மையை அறிய வேண்டும்
குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரும் கூறி வரும் நிலையில் தான் யார் என்று தெரிந்து கொள்ளவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். முதலில் மகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அம்ருத்தா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications