பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஓபிஎஸ்... அதிமுக இணைப்பு குறித்து ஆலோசனை?
அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று சந்தித்து பேசுகிறார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக மும்பையிலிருந்து நேற்று மாலை டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக இணைப்பு குறித்து அவருடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். பின்னர் பிரதமர் மோடியைச் சந்திக்க முயற்சித்தார். ஆனால் பிரதமர் மோடி, நேரம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் டெல்லியிலேயே காத்திருந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த சனிக்கிழமை மும்பை சென்று அங்கிருந்து ஷீரடிக்கு சென்றார். அவருடன் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஷீரடிக்கு சென்றனர்.
ஷீரடியில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை மும்பையிலிருந்து டெல்லி சென்றார். டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் முயற்சிப்பதை பார்க்கும் போது அதிமுக இணைப்புக்கான முடிவை எடுத்திருப்பார் என்றும் இன்று மோடியை சந்தித்தவுடன் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தினகரன் நடத்தும் மேலூர் பொதுக் கூட்டத்திலும் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications